முட்டாள் கணக்கு

வாழ்க்கை என்கிற
வரவு செலவு
கணக்கில் நான்
நித்தம் செலவாகிறேன்...

என் பெயரில்
வரவு என்பதெல்லாம்
வட்டி கணக்குகள் -இது
குட்டியிடும் கணக்குகள்...

கழித்து கழித்து
கிழிந்து போகிறேன்
கொஞ்சம் கலைந்து
கலங்கி காணாமலாகிறேன்...

கூட்டத்தான் பார்க்கிறேன்,
கூட்டத்தின் நடுவே
நானே கூடிக்கொள்கிறேன்
இங்கே வகுக்கப்படுகிறேன்...

தினம் தினம்
வட்டிக் கணக்குகளை விட
வசை கணக்குகளே-என்னிடம் 
அதிமாகும் சகிதம்...

பெருக்கல் கணக்குகள்
பெருக்கும் போதெல்லாம்
சுருக்கும் கணக்குகளாய்
சுருங்கி போகிறேன்...

விதி கணக்கும் - கூட 
சதிக் கணக்காய் மாறி
சற்றே சதிராடும், என்னிடம் 
கொஞ்சம் புதிர் போடும்...

இத்தனை கணக்கு
போட்டும் விடை
புஜ்ஜியம், அதுவே
என் ராஜியம்...

            ✍️விசித்திரக்கவி 









Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்