எழுந்து வாடா என் தோழா...
உரிமைகளை விற்று ஊமையாகிக் கொண்டிருக்கிறாய் உணர்வுகளைத் தொலைத்து ஊணமாகித் தவிக்கிறாய்... உழைப்பை மறந்து ஊதாரியாய் திறிகிறாய் உரக்கப் பேசினாலே-உன் நரம்பேயுனைக் கொன்றுவிடும் தொடுதிரையில் தொட்டபடியே தூங்கிக் கிடக்கிறாய் தூசுகள் படிந்து துரும்பாய் உதிர்கிறாய்... உதிரத்தின் வேகத்தில் அதிரும் இளமையடா ஆகாய வீதியில்-இங்கு ஆழ்கடலே பாயுமடா... எழுந்து வாடா என் தோழா ஏணிகள் தேவையில்லை துணிவுகள் போதும்... -விசித்திரக்கவி...