Posts

Showing posts from December, 2020

காதல் தேவதையே

Image
காத்தோடு காத்தாக உனை தேடுறேன்... இராத்திரியில் உனை-தானே நெனைச்சி பாடுறேன்... உன்னோடு உன்னோடு-பெண்ணே  உயிர் கொண்டேன் உயிரோடு உயிரோடு-நான் உயிர்குலைந்து போறேன்... நினைவோடு நினைவாக நீந்திப் போகிறேன்... நினைவிலே நீ வந்தால்  நிம்மதி இலக்கிறேன்... விழிகள் யெல்லாம் வலியாலே வாடுதே வழிகள் இருந்தும்-உன்  விழிகளை காணலையே... சின்னச் சின்ன ஆசைகளில் நீ தானோ என்னை சிலிர்க்க வைத்தவள் நீ தானோ... இதயச் சுவரிலே உன் பிம்மம் சிதைந்து போகுதே என் இன்பம்... அந்தி சாயும் நேரத்தில் தான் -நான் அமராவதி கரையோரம் உனக்காக காத்திருக்கேன்... காணாமல் போன -எந்தன் காதல் தேவதையே இமைக்குள் நீயும் கொஞ்சம் வாயேண்டி... நான் இன்றாவது  தஞ்சம் கொள்கிறேன்...                  ✍️விசித்திரக்கவி 

கடைசி கண்ணீர் துளி...

Image
(சிலருக்கு மட்டுமே பொருந்தும் ) தேடித் தேடி தீர்ந்து போகுதே என் கண்ணீர் தீர்ந்து போகுதே... இமைகளை விட்டு நீ எங்கே வெறுத்து போனாயோ - அதை  விற்றுப் போனாயோ... இமயம் தெரிந்ததென இளமை தீருமென இடையே விட்டு இளையவளே போனதென்ன புதுசுகம் வந்ததென பூமணம் அழைத்ததென என் புன்னகையோடு உன் பெண்நகையும்  அழிக்கப் போனாயோ... விளக்கு ஏத்தியவளோ விலகி போகலாமா விலக்கி போகலாமா ஆசைக்குதான் போகலாமா... பால்மணம் கண்டவள் பால்மனம் காணலையோ பால் நிலவே -நீ  பாழாய் போகலாமோ  உண்ண குறையா உடுத்த குறையா உறவிலே குறையா உணர்விலே குறையா என்னடி வைத்தேன் -நான்  என்னடி வைத்தேன் நீ வைத்ததை யெல்லாம் வாடாமலாடி வந்தேன்  சொல்லடி சொல்லடி சீமையிலே இல்லாத கருப்பட்டி கண்ணழகி காஞ்சிப் பட்டழகி...                    ✍️விசித்திரக்கவி

பாடல் வரிகள்

Image
Flower தானே பொண்ணு Fishya pola கண்ணு -அவ       Ok சொல்லி புட்ட கட்டிக்குவேன் நானு... நான் பஞ்சிமிட்டாய் வாங்கித்தரேன் பக்கத்துல கொஞ்சம் வாடி உன் பிஞ்சி விரலால எனை    தொட்டு புட்டு போடி... பக்கத்துல போனா சுட்டு தள்ளும் gunna அதுதான் அவ கண்ணா இவ எந்த ஊரு கண்ணா-அட  இந்த ஊரு பொண்ணா... துள்ளிக்கிட்டு போனா அவ இப்படியே துள்ளிக்கிட்டு போனா எப்படி பிடிப்பேன் நானு... என் dreamla Sweety scootyla Butterfly ya போல வந்தா... நான் கொஞ்சம் கண் திறந்து பார்த்தா அவ Colour full கனவ களைச்சிட்டு தானே போறா... உன்னோட facesu ரொம்ப brighttu அதை பாத்துபுட்டன் nighttu அட நான் இப்போ tube light டு கேரட்ட போல கலரு  அவ Powerfullana cloverru எனக்கு ஏத்த perfact டான National sugaru... அவ தானே  national sugaru...                  ✒️விசித்திரக்கவி

மாமன் மகள்

Image
மதுரை மல்லியாய்  மணக்கும் சந்தனமாய்  மான்விழி பார்வையில்-எனை   மத்தாப்பாய் சுத்திடுவாள்   மந்தரை பெண்ணழகியோ   மயக்கும் கண்ணழகி  மாலை நேரத்தில் -என்  மாங்குயில் ராகமவள்  மாதுளை கன்னத்தில்  மாங்கனி சுவையாள் மச்சானை மயக்கி  மடியிலே சிறைபிடிப்பாள்... மார்கழி மாதத்து மாந்தளிராய் மின்னிடுவாள்  மஞ்சனையிலே நெஞ்சோடு  மாமனை அணைத்திடுவாள்  மயக்கத்தில் என்  மடி சாய்வாள்  மச்சத்தை காட்டி-என்   மனதை கட்டிடுவாள்  மாமான் மகளோ -என்  மாமான் மகளோ  மணி மணியாய்-பூ   மாலையாய் பூத்து  மாலையிலே காத்திருப்பாள்...   

விழிகள்

Image
  மானாக துள்ளும்  மயிலோட மச்சவிழி  பார்வை ரெண்டும்  மச்சான மயக்குதடி...  பவளக்கொடி கூந்தலுக்கு  முல்லைக்கொடி முந்திக்கிச்சி...  மல்லிகைச் செடியோ  மனசுகுள்ள கதறுதடி...  பட்டுப் புடவையில  பட்டாம்பூச்சி பறக்குதடி...  நானோ நூலறுந்த  பட்டம் போல திரியுற... அதிகாலை பனி -போல்  நெஞ்சமெல்லாம் குளிருது...  நினைவெல்லாம் அவளையே -சுற்றி  சுற்றி வருகுது... 

வருகிறேன்...

Image
வருகிறேன்...  அனைவருக்கும் வருகிறேன்...  வருகிறேன் என்றால்  வருகிறேன் என்பதல்ல,  இனி வரவேமாட்டேன்  என்பதே பொருள்...  அங்கே பாருங்கள்...  ஓர் அழகிய தேர் தயாராகிறது...  பச்சை மூங்கிலும்  பச்சை ஓலையும்   சேர்த்து பின்னிய  தேர் எனக்காக  காத்திருக்கிறது...  இதுவரை சூடாத  பல மலர் மாலைகள்,  என் மார்பின் மேல்  மலைகளாக குவிகிறது...  இதுதான் என்  வாழ்விற்க்கு என்  வாழ்க்கை தந்த வெகுமதியா...  இங்கு பாருங்களேன்...  ஒரு அதிசயம் நிகழ்கிறது...  என்னை சுற்றி  ஓர் வட்டமேசை மாநாடு...  தம்பி சொன்னான்  திண்ணை எனக்குத்தான்...  அண்ணன் புலம்புகிறான்  அந்த புளியமரமும்   எனக்குத்தான் என்று...  தங்கை கேட்கிறாள்  இவன் என்ன செய்தான் நான் செய்ய...   பாவம் அவளுக்கு தெரியாது  என்னால் முடிந்ததை செய்தேனென்று...  மகனும் மகளும்  கைகள் பற்றி கதறுகையில்  என் பதறாத  இதயம் கொஞ்சம்  பதறி போகிறது...  மனைவி மாரடித்...

மல்லிகை நானும் சென்றுவந்தேன்

Image
அந்தியில் சந்திக்க -எந்தன்  ஆவி துடிக்கிறதே மொட்டவிழ்ந்த மலரை -நாட எந்தன் கை தவிக்கிறதே...  வட்டநிலா வந்ததும் -எனை  தேடி வந்திடுவாள் சுட்டநிலாவை கண்டாள் -தனை  சுடர் விட்டெரிவாள்...  பட்டுடல் தீண்டிட -என்  பக்கத்தில் வருவாள்  புத்தம்புதிய கற்பனைகள்  பல தருவாள்...  கொள்ளை அழகில் -கன்னி  தினம் பூத்திருப்பாள் பூத்தவளோ பூக்காதென்னை  பூப்பறிக்க காத்திருப்பாள்...  கொண்டவன் காண  மல்லிகை யெனை  முல்லை அவள்  கொண்டையில் சொருகிடுவாள்...  கண்ட அவனோ  கட்டுக் குலைந்திடவே  முல்லை இதழை  அள்ளிப் பருகிடுவான்...  தொட்ட இடமெல்லாம்  மின்னல் மின்னி  ஒளி மறைந்திட  நள்ளிரவில் களைத்திருப்பாள்...  பூவையாளோடு பூனானும்  பூலோகம் விட்டு  புண்ணிய லோகம்  சென்று வந்தேன்... 

பால் நிலவு

Image
செக்கசிவந்த செவ்வானமும்  சிவந்து போகும்  செவ்விதழ் கொண்டவளே  வட்ட பொட்டழகி...  வஞ்சமில்ல வஞ்சிக் கொடிஇடை அழகியோ  கண்டாலே போதையேற்றும்  கஞ்சாக் கண்ணழகி...  கருமேக காட்டாறு  கூந்தலுக்கு சொந்தக்காரி  அவள் செங்கரும்பு உதட்டுக்கு -நான்   சிட்டெறுப்பு காவக்காரன்...  பூ மேனியிலே  பொன்கருப்பு சாறெடுக்க  பால் நிலவில்  பாய் போடலாம் வா...   

தாவணிச் சிலையே

Image
ஆத்தாடி...  மேனி நிறைய  ஊர்வலமா வந்து  உதட்டு ரேகையில  ஊடுருவி கொஞ்சம்  தஞ்சம் கொள்ளவா...  மாங்கனி நெஞ்சத்தில்  மையல் கொண்டு  மஞ்சள் நிலவோடு  மஞ்சம் கொள்ளவா...  மல்லிகை பூவுக்கு  என்னடி மந்திரம் சொன்ன...  மான்விlழி பார்வையில்  மச்சானை மயக்குதடி...  அல்லி தண்டு  இடையில் நான்  துள்ளி விளையாட...   துளித் துளியாய்  நீ  நெளிந்து  என் ஆசைகளை அலந்து சொல்ல... அந்த இரவு  எந்த இரவு...  அது இந்த  இரவானால் அடடா...  போதும் போதும்  சொல்லாமலே சுகம் -தான்  சொக்கிப் போகுதடி... 

இறைவா நீ வா...

Image
இறைவா நீ  இருக்கிறாயா...?  நீயே தான்  இறைவா இருக்கிறாயா...?  அங்கே என்ன  தேடுகிறாய்...  இன்னும் ஏதேனும்  புதிய சோதனை இருக்கிறதா...?  அந்த சோதனையில்  தரத்தில் இன்னும் பாவமா  போதும் போதும்...  இதோ  பார்  குப்பை தொட்டியில்  குழந்தையின் குரல் கேட்கிறதா உனக்கு... கண்கள்  இருக்கிறதா உனக்கு...  அப்படியே இருந்தும்  கருவறைக் குள்ளே  கற்புகள் சூறையாடப்படுவதை  கண் கொட்டாமல்  ரசிக்கிறாயோ...  ஊருக்கே  உதவியவன்  ஊருக்குள் ஆண்டியாக ஆகலாமா...  கொடுத்து சிவந்த கரங்கள்  சீல் வடியலாமா...  பள்ளி அறையில்  பிஞ்சுகளை மஞ்சமிட வைத்து  மதயானை போல்  மண்மேலே திரிவது நியாயமா... உழவனே ஒருபிடி  சோத்துக்கு சகலமா...  செத்து செத்து  அவன் சரிந்து போகலாமா...  தவறு செய்தவன்  தப்பிக்கிறான் அதை  தட்டி கேட்டவன்  தரமாக தண்டிக்கப்படுகிறான்...  நாக் கெல்லாம்  கொடும் நாகங்களாக மாறி  நெஞ்சத்தில் நஞ்சினை  கக்கிகக்கி நொந்ததை  காணலையோ நீ...  ஈர மண்ணிலே  இன்னும் ஏனடா  இடி மேல் இடி  விழ காரணம்...  பத்தினியோ பைத்தியம் போல்  பத்திய மிருந்தும்  பாழாய் போன  உலகம் வேசி பட்டம் கட்டுவதோ...  உனை அழைத்து  அழைத்து அழுதது போதும்...  உன் தொழில் ம...