புதிய நாடு 3
30/01/21 ✍விசித்திரக்கவி அன்றைய நிகழ்வு அவனது மனதிற்குள், ஓயாமல் அடிக்கும் அலைகளை விட, கடும் சுனாமியின் சீற்ற அலைகளாக அடித்து கொண்டிருந்தது... பிஞ்சு மனதிற்குள்ளும் எரிமலையும் வெடிக்கும் என்பது, அன்று அவன் கண்களில் மூலம் கர்ச்சித்தது... அசகாய சூரனெல்லாம் அடங்கி போகும் அளவுக்கு கண்களில் ஒரு மாபெரும் பார்வை... ஜான் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை அல்லவா... மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்றுள்ள சில வெள்ளை மனம் கொண்ட மாமனிதர்களும், மகத்தான அரசியல் தலைவர்களும் நிலமையை கண்டு கண்ணீர் வந்தும் காட்டாமல், வயிற்றின் பாட்டையறிந்து இயன்றதை கொடுத்து உதவினார்கள்... சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் தரமாட்டான் என்னும் முதுமொழிக்கேற்ப்ப, உதவியக் காரங்களின் கருணைகள் யாவும், அதை கண்கானிப்பவனின் கைக்குள் அடக்கமாகி போவதை கண்டால், கண்களே குருடாகி இருக்கலாம் என்றே மனம் கொதிக்கிறது... எழுத்துக்கள் மூலம் பார்க்கும் நமக்கே இப்படி என்றால் இழப்பில் உள்ளவனின் உள்ளத்தில் எப்படி இருக்கும்,இடி ...