மனிதனாய் பிறந்து விட்டேன்...


யாரையும் வெறுப்பதில்லை-நான் 
எவரையும் மறப்பதில்லை
வேண்டாமென்றெனை ஒதுக்கிவிட்டால்
உயிரே போயினும் ஏற்பதில்லை...

அள்ளித் தந்தவர்களை
எள்ளி ஆடுவதில்லை
தள்ளிப் போனாலும்
கொல்லி வைத்துப்போவதில்லை...

துள்ளிப் போனவர்களே
போய் விடுங்கள்
தத்தளித்து கிடக்கிறேன்
தடம் மாறியும் வாராதீர்...

உள்ளொன்றும் வெளியொன்றும்
விலை பேசி
எதைதேடிப் பிடித்துவிட்டாய் -உன் 
மதிப்பையும் இழந்து விட்டாய்...

மனிதனாய் பிறந்து விட்டேன்
தனிமரமாய் நின்று விட்டேன்
காலங்களே சொல்லுங்கள் இனியென் 
கல்லறையாவது பூக்கட்டும்...

-விசித்திரக்கவி 

Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்