Posts

Showing posts from October, 2020

கூடல் பொழுதுகள்

Image
 கூடல் பொழுதுகள்  கண்ணயரும்  வேளையிலே  கன்னியவள்  கால்கொலுசு  கலகலக்க  காதோரம்   இன்பக்  காணம்  கரைய...  கன்னியவள்  சிலையென  கண்ணனிவன்  சிற்பமென  கண்ணடாதோர்  காவியம்  கலைந்ததோ  ஓவியம்...  தீராதாகமென  மேனி  கடற்கரை  போலே...  விடியா  வானம் விடியும்  வரை  வீணையின்  ராகம்  நாடிநரம்பெல்லாம்  நர்த்தனம்  நொடிக்கு  நொடி  ரதியவளின்  கீர்த்தனம்...  மஞ்சணையிலே  மன்மதனின்  மத்தளங்கள்  மாங்கனி  அவளின்  மாதுளை  கன்னங்கள்...  அடடா,  இரகசிய  இரவினில் எத்தனை எண்ணங்கள்.... போடா,   இதில்   இத்தனை  இன்பங்கள்...  மதியது  மத்தியிலே  மங்கைக்கு  இடையினிலே  போடா,  நான் மட்டும்  இன்பக்  நடுக்கடலினிலே...  தொடையழகா  இல்லை  இந்த  இன்ப கவிநய  நடையழகா...  பாவழகா  இல்லை  இந்த  பருவ  பாவையழ...

முயற்சி

Image
 முயற்சி  வா...  வா...   தோழா  வானம்  தான்  இருக்கு...  வாசற்  படிக்குள்  என்னதான்  இருக்கு...  இதய  கூட்டிலே  ஈரம்  தான்  இருக்கு...  நீ  ஏறி  மிதிக்க  புது  வீரமிருக்கு...  எட்டி  பிடிக்க  விண்மீன்  இருக்கு...  கட்டிப்  அணைக்க  மின்னல்  இருக்கு...  இடித்து  நொறுக்க  இடி  இருக்கு...  துள்ளி  விளையாட  தூரல்  மழையிருக்கு...  துரத்தி  அடிக்க  புயல்  இருக்கு...  துணிந்து  போக  -இனி  பயம்  எதற்கு...  இருட்டு  குள்ளே  இரண்டு  காதிருக்கு...  முள்  பார்க்க  மூன்றாவது  கண்ணிருக்கு...  கல்  எறிய  கோள்  இருக்கு...  இனி  கண்ணீர்  தான்  எதற்கு...  சாட்டை  எடுத்து  விட்டதை  விரட்டு...  அள்ளி  பருக  அருவி  இருக்கு...  நீ  ஆட்டி  வைக்க...

கூடல் பொழுதுகள்

Image
கூடல் பொழுதுகள்  உதடுகள்  நான்கும்  ஊஞ்சல்   ஆட  உடல்கள்  ரெண்டும்   உருமாறி  உருகிப்  போகட்டும்...  இமைகள்  எட்டும்  கொஞ்சம்  மூடட்டும்  இரண்டாம்  உலகம்  இன்றே  காணட்டும்...  காற்றும்  கலங்கட்டும் காதலன்  காதலி  தேடி  ஓடி  சிட்டாக  ஒட்டட்டும்...  பட்டுடல்  பட்டுப்-போல்  பின்னட்டும்  தொட்ட  இட  மெல்லாம்  தேனாக  சொட்டட்டும்...  மின்மினி  மட்டும்  மின்னட்டும்   ஆசைகள்  எங்களை  போல  கட்டிலில்  துள்ளட்டும்...                              என்றும்  தமிழோடு                                   @விசித்திரக்கவி...

இன்றும் பச்சை மண்ணோ ...

Image
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து எனும் மூச்சில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ... உங்கள் கருத்துகள் மூலம் உயிர் கொடுங்கள்... இன்றும்  பச்சை  மண்ணோ ... பச்சையாக  சொல்கிறேன்...  இருண்ட  வானில்  இருள்  பச்சையாகவே  இருந்தது...  கண்ட  பச்சை  கனவுகள்  கண்விழித்தும்  கண்களுக்கு  இடையே  பச்சையாகவே  பளிச்சிட்டது...  அந்த  இரவின்  பச்சை  தூக்கத்தில்  பச்சையான  பச்சை  கனவு  என்ன?...    பக்கம்  வாருங்கள்...  பச்சையை  பச்சையாக  பச்சை  போலே  பச்சையாக  பச்சை  பாமர  உழவன்  உற்பத்தி  செய்கிறான்...  கண்களுக்கு  பச்சையாகவே  தெரிந்தது... அது  பச்சைமண்  அல்ல  என்று...  வானத்தின்  வாக்குக்கு  வாய்ப்பளித்து  வாய்பிளந்து  வானத்தை  வற்றாத  பச்சை  கனவோடு  கண்களில்  ஈரம்  சொட்ட  கனவு  காண்கிறான்...  அந்நேரம்  வெள்ளை...

தீயாய் தென்றல்

Image
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து எனும் மூச்சில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ... உங்கள் கருத்துகள் மூலம் உயிர் கொடுங்கள்... தீயாய் தென்றல்   என்னவனே ... தென்றல்  வந்து  தீண்டி  தீண்டி  தினம்  தினம்  -நானும்  தீயில்  பாய்கிறேன்...  தேடித்  தேடி  தேய்ந்து  தொலைக்கிறேன் தீவாய்  நானும்  -உன்  நினைவில்  போகிறேன்... சாரலோடு  சண்டை  போட்டு  புயலோடு  புல்லாங்குழல்  -கொண்டு  பொழுதெல்லாம்  பூவே  உன்னோடு  புலம்புகிறேன்... புன்னகை  யெல்லாம்  நீ  பறிக்க-  நிழலாய்  நானும்  சாய்ந்து  சாகிறேன்...  காற்றோடு  கரைந்து  தீயினை  தீண்கிறேன் நீரிலே  நடந்து  நிலத்திலே  நீந்துகிறேன்...  நான்  இல்லாமல் நீயாய்  தவிக்கிறேன்...  கனவோடு  காய்ந்து  நிஜத்தினிலே  நனைகிறேன்...  காகிதத்தோடு  கனைத்து  காலத்தோடு  கை கோர்க்கிறேன் கண்ணே  உனை-காண  காதலோட...

நவீன நாகரிகம்

வாசகனும் வாசகியும் தருகிற கருத்து எனும் மூச்சில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ... உங்கள் கருத்துகள் மூலம் உயிர் கொடுங்கள்... நவீன நாகரிகம்  குலையும்  மார்காட்டி  குலையாத  இடைகாட்டி  தொடுத்  திரையில்  தொப்புளையும்  காட்டி  தொடை  தொட  உடை  காட்டி  வண்ணத்  திரையில்  வளமை  உடல்  காட்டி  சரித்திரத்தில்  என்ன  சாதிக்க  போகிறீர்கள்...  உணவுக்கு  உடல்  விற்ற  வேசி  கூட  நான்கு  சுவற்றுக்குள்  நாகரிகமாகத்  தான்  நடக்கிறாள்...  உங்களின்  உல்லாச  உணர்வுக்கு  பிஞ்சுகளின்  பார்வையில்  மார்வாடிக்  கடையில்  மானம்  விற்ற  மங்கையராய்  மணக்க  வேண்டுமா...  இன்றைய  காணொளி  நாளைய  உன்  மகனும்  மகளும்  காணலாம்...  ஜாக்கிரதை...                                   ...

கிராமத்துக் காதல் வரிகள் ...

Image
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து எனும் மூச்சில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ... உங்கள் கருத்துகள் மூலம் உயிர் கொடுங்கள்... ஓர் இரவின் நட்சத்திர குளியலில்  தலைவனும் தலைவியும் பிரிவின் வலியை  பாடி தீர்கிறார்கள் ... இவ்வாறு ... கிராமத்துக் காதல் வரிகள் ... அடியே  அழகியே             (தலைவன்) ஐந்தடி  காப்பியமே             அசைந்தாடும்  ஓவியமே  வானத்து  வெண்னிலாவும்  வாய்ப்பிளக்கும்  அதிசயமே...  என்  வஞ்சிக்  கொடி  இடையே...  இக்உம்...             (தலைவி) அந்தி  நேரமும்  வந்தாச்சு  அகல்  விளக்கும்  வைச்சாச்சு  மச்சானை  பாத்தாச்சு மெத்தையும்  போட்டாச்சு...  அல்லி  ராணிய       அள்ளி  எடுத்தாச்சு  தொட்ட  இடமெல்லாம்  தொடர்  கதையாச்சு...  ஆசை  மச்சானுக்கு    (தலைவன்) அள்ளி  தந்தாச்சு  -இனி...

பிஞ்சு ரோஜாக்கள் பூக்கட்டும்...

Image
 பிஞ்சு ரோஜாக்கள் பூக்கட்டும்...  அரங்கமே  அமைதியில்  அழுகையில்  பிஞ்சு  ரோஜாக்கள்...  அவர்களை  அப்படியே  விட்டு  விடுங்கள்... உங்களின்  வன்புணர்வு  விரல்களுக்கு  இடையில்  சிக்கி க்  கொண்ட  மலராத  மொட்டு  ரோஜாக்கள்  அவை...  பாலை  வானத்தில்  பூத்த  ரோஜாக்கள்...  உங்களின்  பாழாய்  -போன  பாலியல்  வன்கொடுமையில்  பறிக்க   பட்ட  பாவப்பட்ட  பூக்கள்...  புத்தகமும்  புதிய  கனவுகளும்  புத்தியில்  சுமக்கும்  வயதில்,  மனதோடு  மக்காத  அந்த  கொடூர  நினைவுகளை   பரிசளித்த  அறிவுள்ள  பைத்தியவாதிகளே...  அப்படியே  விட்டு  விடுங்கள்...  உங்களின்  பசி  தீர்க்க  அந்த  பூக்களை  புசிக்காதீர்கள்...  பூமியில்  பூக்காத  இன்னும்  எத்தனையோ  ரோஜாக்கள்,  நினைத்தாலே... அவற்றின்  வண்ணத்திலேயே  வருகிற...

முக்கியச் செய்திகள்

Image
கட்டில்  கலவரத்தில்  இருவர்  கைது,  மதுரை  மல்லிக்கும்  திருநெல்வேலி  அல்வாவுக்கும்  மிகப்பெரிய  சேதாரம்...  செய்கூலியோ  பத்தாவது  மதத்தில்  எதிர்பார்ப்பு... காரணம்,  மார்கழி  மாதத்தின்  மேல்  வீண்பழி...                                                                                      என்றும் தமிழோடு                                                                                     விசித்திரக்கவி 

விசித்திரக்கவியின் அறிமுகம்

Image
    விசித்திரக்கவியின்                       கவித் துளிகள்...       அறிமுகம்           எ ன் முத்தமிழோடு அறியா வயதில் எழுத்தாணிக் கொண்டு வெள்ளை காகிதங்களில் நான் போட்ட துள்ளல் விளையாட்டுகள்... பிழைகள் இருப்பின் தமிழ் கற்ற சான்றோர்கள் அறியா சிறுவன் இவன் தமிழோடு கற்று கைவீசி விளையாட வந்துள்ளான் என நினைத்து கொஞ்சம் விளையாட்டை ரசித்து உங்களின் கனிவான கனிந்த சிந்தனைகளை கொஞ்சம் எனக்கும் கற்பித்துச் செல்லுங்கள் ...                            த மிழோடு விளையாட விதி செய்த என் அன்னை முதல் அறிவுசார் ஆன்றோர் அகில மாந்தர் அனைவருக்கும் என் அன்பு கலந்த கோடான கோடி நன்றிகளோடு என் வணக்கத்தையும் உரித்தாக்கி கொள்கிறேன் ...     என்றும் தமிழோடு நான் விளை...

தேவதை

Image

இராட்சஷி

சஹாராவுக்கும்  நயாகராவுக்கும்  நடுவே   நிறுத்தி  நட்டநடு   ராத்திரியில்  நகத்தினால்  நரம்பினை  வீணை   போல்   மீட்டுகிறாள்...  விண்ணை   முட்டும்  முத்தச்   சத்தத்தில் மொத்தமும்   கொள்ளையடித்து  கொலை   செய்கிறாள்... சஹாராவுக்குள்  நயாகரா   நகர்ந்த பின்னும்   இன்னும்  சுகம்   கூட்டுகிறாள்...  வற்றாத   நயாகராவும்  நாணம்   கொள்ளுமளவுக்கு  கொஞ்சுகிறாள்...  சஹாராவாக   நான்  உரிய   உரிய  செவ்விதழ்  செந்தேனை  சுரக்கிறாள்...  போதும்   போதுமடி  ராச்சசி   இடை இடையே   இடைக்கும்  சிறுது   இடைவெளி   தருவோம்...  இராவெல்லாம்  கனிந்து   இனிந்து  இணைத்தே   இருப்போம்...                           --- விசி...

காதலனின் காத்திருப்பு...

வானவில்  போல  வாழ்ந்து  போனவளின்  வார்த்தைகளை  வண்ண வண்ண  மைகளால்  வரிசையாக  கோர்த்தேன்  வரிகளானது...  வரிகளோடு  கொஞ்சம்  வர்ணனைகள்  கூட்டி வர்ணனைகளுக்  கிடையே  வற்றாத  நினைவுகளின்  வலியை  கொட்டினேன் கவிதைகள்  ஆனது...  வாசித்தவர்  எல்லாம்  வாழ்த்துக்களை  வழங்கி  வாழ்த்திச்  செல்ல - நானோ  வார்த்தைகள்   யின்றி...  வசந்தத்தின்  வசந்த  மகள்  வருவாளோ  என்று  வாசற்படி  ஓரமாய்  வாயடைத்து  காத்திருக்கிறேன்  வழியும்  கண்ணீரோடு...                      என்றும்  கற்பனையின் விளிம்பில்                                         ❤விசித்திரக்கவி

என்னவளோடு என் தனிமை பொழுதுகள்

அம்புலியின் காதலி  கண்ணடித்த நேரமோ  வைகறையின் தொடக்கம்...  நெடுந்தூர பயணதின்  அகலச்  சாலையில்   அகல மறந்த  தென்றலின் தீண்டல்கள்...  வரவேற்கும் மரங்கள்  வந்தனம் பாடும் பட்சிகள்  தூங்கும் நிழல்கள்  தொங்கும் கூடுகள்...  அவளின் ஊடல்களோ  என்காதோடு தான் கூடல்கள்  கொஞ்சலோடு அணைப்பாள்  கொஞ்சமாய் சிரிப்பாள்   கோவதில் லேசா  கடிப்பாள்  கன்னத்தில் இதழ்களை  அவிழ்ப்பாள்...  உடனே கேட்பாள் எத்தனை என்பாள்  சொன்னால் முறைப்பாள்  சொல்ல மறுத்தால்  சிரத்திலே சின்னதாய்   அடிப்பாள்... கிள்ளினால் சினுங்குவாள்  ரசித்தால் மருகுவாள் நகர்ந்தால் பிடிப்பாள்  ராட்சசி இராந்தலின்  ரகசியத்தில் இன்னும்  எத்தனையோ செய்வாள்... இந்த கவிதை என் கற்பனையில் என்னவளின் சில செய்கைகளை  ரசித்து இறுதியில் நானே கவிஞன் ஆகிறேன் ...                                     என்றும் கற்பனையின் விளிம்ப...

தீக்குச்சி

தீக்குச்சி  தீக் குச்சிகளே  தீ குளிக்க  தயாராகுங்கள்...  நாளைய சமுதாயத்தின்  தீமைகளை இன்றே  தீயிட்டு கொளுத்த...