Posts

Showing posts from November, 2020

ஓர் கணவனின் தவிப்பு

Image
அன்றொரு நாள்  அதிகாலை பொழுது  தலையணை அருகே  அழகாக சிணுங்கியது...  அவளின் அழைப்பை  ஏற்ற என்கைபேசி...  பக்கத்தில் இருந்தும்  பார்க்காமல் தேடினேன்...  கண்விழித்து கண்டேன்  என்னவளின் அன்பு  முகத்தில் புன்னகையின்  புதுபுது அர்த்தங்கள்...  தொடுதிரை தொட்டு  கொஞ்சம் கரகரத்த  குரலில் ஹலோ...  மீண்டும் ஹலோ...  எதிர் முனையில்  மாபெரும் மௌனம்  சிறுது  நேரம்   என் குரல்  மட்டுமே ஒலிபரப்பு... பதில் ஒன்றும் இல்லை...  படுத்திருந்தவன் எழுந்தேன்  தூக்கமதை தொலைத்தேன்  கனவுகள் கலைந்தது  துக்கம் தொண்டையை அடைத்தது...  கைகள் நடுங்கியது  மனதுக்குள் ஏதோ  ஒரு பெரும்  பாரம் கூடிக்கொண்டது...  ஒவ்வொரு அணுவும்  ஓராயிரம் எரிமலையாய்  என்னுள் எக்காளமிட்டு  வெடித்துச்  சிதறியது...  சேவலின் சத்தம்  சங்கு சத்தமாய் சூன்னியமானது... அவளையே சுற்றுது  என் நினைவுகள்...  அது ஏனோ  ஏனோ அது  என் மனம் மட்டும்  துடியாய் துடிக்கு...

சுமைதாங்கி

Image
உன் கண்ணாடி பார்வையில்  என் இதயம் உருபட்ட  காயங்கள் சிலகோடி...  தேனீகள் கட்டும் கூட்டில்  உன் கள்ள பார்வைபட்டு  கொப்பளித்த கொப்பளங்கள் பலகோடி...  உடல் இட்ட முட்டை  ஈட்டி பார்வை முட்டி  அந்தரத்தில் சமைத்த மாயமென்ன...  நரம்பின் நாளங்களில் ரத்தமில்லை  ஆழ் கடலில் அமைதியில்லை  எங்கும் எதிலும் நினைவில்லை...  சொல்லும் சொல்லில் பொருளில்லை செல்லும் வழியில் நீயில்லை -அதை  சொல்லும் நிலையில் நானில்லை...  நீல மேகத்தில் நிலவில்லை  எரியும் தீயில் அனலில்லை  உடலில் உயிர் இல்லை  உணர்வில் உன்னத மில்லை...  வசைப்பாடிய வார்த்தை கேட்டு  வானவில்லில் ஏழு நிறமில்லை...  இனி என்றும் உனை  ஏற்கும் ஏகாந்தத்தில் யானில்லை...  உன்னால் எதிர் வரும்  என்காலம் சுமைதாங்கியாக மாறட்டும்... 

அவளது நினைவுகள்

Image
மழை நீரில்  நீந்திச் சொல்லும்  காகித கப்பல் -போல்  இனியவளின் நினைவுகள்...  இனியேனும்  கரை சேருமோ...  இல்லை சாகரத்தில்  தீவாய் தனியாய் திரியுமோ... 

சொட்டும் காதல்துளிகள்

Image
நட்சத்திரங்கள் வெள்ளி பந்தை பார்த்து காதல் பார்வையினை பொழியும் நேரமது...  ஆம், அது ஓர் அதிகாலை பொழுது,  மார்கழி மாதத்தின் மாபெரும் குளிரின் நடுக்கமும் அதன் தாக்கமும் அவன் உடலை ஏதோ செய்து கொண்டிருந்தது...  சட்டென்று முந்திக்கூவியின் முணுமுணுத்தலில் கண்விழித்தவன்  செய்வது அறியாது, அந்த ஒளி குறைந்து ஒளிரும் பல்புகளையே வெறித்து பார்க்கையில் என் மனது என்னிடம் தவறு செய்து விட்டாய் மாறா என்று என்னை திட்டிகொண்டிருந்தது...  இன்றைய தேதியிலிருந்து சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்...  நிற்க இடம் இல்லாமல் மிகுந்த வேகத்துடன் 5c என்ற பேருந்து கண்ணகி நிறுத்தத்தில் நின்றது...  அலையும் அலை  கடல் போல்  ஆறடி கூந்தலும்  காற்றிலே கூத்தாடுது...  பொட்டு வச்ச  பூந்தளிர் மேனியோ  புழுதி பறக்க  புல்லாங்குழலிசை பாடிவருது...  கால் முளைத்த  கன்னி இவள்  வெள்ளைநிற தாவணியில்  பிள்ளை அவள்...  தேவதை அவளின் அழகை வரிகளாக வர்ணித்து தான் மனத்துக்குள்ளே கவிதையினை  அரங்கேற்றிக் கொண்டிருந்தான் மாறன்...  அடித்து பிடித்து ஏறினாள...

கூடவே வாரேன்

Image
ஆத்து தண்ணி -மேல  ஆலமர நிழலு  அழகா நின்னு  காத்தாற குளிக்குது...  கால் வலிக்க -என்   கவலையோடு காத்திருந்தேன்...  அத்தை மகளோ  அதிசய வெண்நிலவோ...  ஆத்தங்கரை மேல  கழுத்த வளைச்சி  இல்லாத இடுப்புல -நீ  இடையோடு இறுக்க...  செப்பு குடம் -செய்த  புண்ணியம் கண்டு  இல்லாத ஆசையெல்லாம் எங்கிருந்தோ ஓடிவருது...   வளைஞ்சி நெளிஞ்சி -நீ  குணிஞ்சி குடம்  தூக்க ஐயோ-தாங்காதே  என் நெஞ்சம் ...  வெட்டருவா கண்ணால  திட்டாத அயிரமீனு  நாலு அங்கேயே -அண்ணம்  தண்ணியிலாம செத்துப்போகும்...  கண்ணால சாடை  மட்டும் காட்டு  குடத்து தண்ணியா  கூடவே வாரே...                 என்றும் தமிழோடு                       விசித்திரக்கவி 

காதலனே...

Image
ஆசை கள்வனே  அழகிய காதலனே  அகிம்சையாய் அழகிய  இம்சைகள் தந்து  அதிசயிக்கும் வேலையிலே -நானும்  ஆழ்கடலில் ஆடுகிறேன்...  இதோ பார்...  வெண்ணிலா வந்து  வெண்ணை கேட்டு  திண்ணையிலே என்னை  தினம் தினம் பாடுது...  தித்திக்கும் தமிழோ சத்தான  கவிதை தந்து...  திகட்டாத முத்தம்  தாவென கேக்குது...  தென்றல் வந்து  இதமாய் தீண்டி  எனை நித்தமும்  திண்டாட வைக்குது...  ஆறடி கூந்தலிலே  அருவியென விழுந்து  அதிகாலை வரை -இந்த  மல்லிகை மயக்குது...  மாலையிட்ட மன்னவனே  காலமெல்லாம் நீ காவலனே  எனக்கு மட்டும்  தினம்  திருடனே...  சாம நேரத்து  சங்கீதம் கேட்டு  நட்சத்திரங்கள் ஓடிவந்து  எட்டிப் பார்க்குது...  முந்தி கொண்ட  கூரையோ முக்காடு போட்டு முழுசா மூடிக்கிச்சி...  ஆசையெல்லாம் அழகா  தண்ணிமேல பக்குவமா  பத்திக்கிச்சி பக்கத்துல  நீ வந்தணைக்க  நிம்மதியாச்சி...               என்றும் தமிழோடு...

இவள் இனி கண்ணீருக்கே தத்துப்பிள்ளை...

Image
கண்களால்  காதல்  சொல்லி  காதுகள்  இனிக்க  இனிக்க  கதை  பேசியவளோ...  கணவனாகும்  முன்னே  கார்கால  மேகம்  போல்  கண்ணீர்  சிந்தி  போகுதம்மா..  கனவுகளை  கொடுத்து  கண்களை  களவாடியவளோ...  கருங்கூ ந்தலில்  பூச்சூடி  கண்டாங்கி  சீலைகட்டி...  கண்கவரும்   ஓவியமொன்னு  கலைந்து  போகுதம்மா...  வரம்   கொடுத்தச்  சாமி   ஒன்னு...  எனக்கு  வரம்  கொடுத்தச்  சாமி  ஒன்னு  எந்தன்  வாசற்படி  வாரமா  தான்  போகுதம்மா...  எந்தன்  காதல்செடி  பூபூக்கும்  முன்னே  மாற்றான்  வீட்டு  மல்லிகையா  மணந்து  மனசு  நொந்து  போகுதம்மா...  சாதி  சனமெல்லாம்  ஒன்னு   சேந்து  ஒன்னான  மனச  ரெண்டாக்கி  அதுல  ஒன்ன  புதைச்சு  புது  வீட்டுக்கு  கூட்டி  போகுதம்மா...  கை  புடுச்சவனோ...

அத்தை மகள்

Image
 அத்தை மகள்  ஆத்து  தண்ணியோ  அழகா  சலசலக்குது  அத்தை  மக  மேனியோ  பளபளக்குது...  பட்டாம்  பூச்சி புதுசா  கண்ணடிச்சி  பஞ்சு   மெத்தையில்  நெஞ்சோடு  ஒட்டிக்கிச்சி ...  எத்தனையோ நாள்  ஏக்கத்துக்கு  இன்றைய  இரவு இலவம்  பஞ்சுக்கு  இலக்கணமா  மாறிபோச்சி... கொஞ்சம்  கொஞ்சமா  கொஞ்சலோடு  கொஞ்சையில  கெஞ்சி  கெஞ்சி  முட்டி   தள்ளுறியே...  மிஞ்சி  மிஞ்சி   -போனா  பக்கத்துல  வந்து  கண்ணத்த  கடுச்சி  கண்ணால  கொல்லுறியே..  பவள  மல்லி  உதட்டுக்கு  இளம்  பஞ்சு  மிட்டாய்  சாயம்  தான்   ஏனடி...  சாயங்காலம்  போயிடுச்சி  சாயமெல்லாம்   வெளுத்துடுச்சி  செல்லமா  சிணுங்கி  ஏன்டி  சிலுத்துக்குற...  ஹ்ம்ம்... சிங்காரி   உன்  சின்ன  உதட்ட ஒட்டு  மொத்தமா  -நான்  குத்தகைக்கு...

என்னடி கள்ளி ...

Image
ஆத்தாடி  உனை  பாத்தாலே  காத்தாடி  -போல கூத்தாடி  போரேண்டி... கண்ணாடி  முன்னாடி  கண்ணாமூச்சி  நா   ஆடி  கண்ணடிச்சி  நான்  கட்டிலில கிடக்குறண்டி...  கண்ணால  கட்டி  -என்  கண்ணம்  கிள்ளி  காதல்   சொல்ல  கனவுலயாச்சும்  வாயேண்டி...  என்னடி  விழிகள்  அது... இமைகள்   ரெண்டும்  என்னமோ  ரகசியம்  சொல்லி  மின்னுது... என்...  நின்றாடும்  நந்தவனமே...  ஆசைகளின்  அதிசய  களஞ்சியமே...  சொல்லடி  என்  செல்லக் கிறுக்கி  ...                                                                  -என்றும் தமிழோடு                                        ...