கண்ணுறங்கு
சின்ன பூவே-என்
சிங்கார கண்ணே
சீக்கிரம் கண்ணுறங்கு...-எங்
காதலியே கண்ணுறங்கு...
கனவுகள் பாடி
நினைவுகள் ஆட
சித்திரை நிலவே
நித்திரை கொள்ள
சீக்கிரம் கண்ணுறங்கு...
சின்ன பூவே-என்
சிங்கார கண்ணே
சீக்கிரம் கண்ணுறங்கு...-எங்
காதலியே கண்ணுறங்கு...
மடிமீது சாய்ந்து
மனதோடு பாய்ந்து
மந்தாரை பூவாய்
மானே கண்ணுறங்கு
மானே நீ கண்ணுறங்கு...
உன் நினைவா
ஊஞ்சல் ஒன்னு
உள்ளே இருக்கு,
உசுருக்குள்ளே ஊடுருவி
உருவம் கொஞ்சம்தான்
நீ மறந்து,
தாலேலோ பாடுறேன்
தங்கமே நீ கண்ணுறங்கு...
சின்ன பூவே-என்
சிங்கார கண்ணே
சீக்கிரம் கண்ணுறங்கு...-எங்
காதலியே கண்ணுறங்கு...
காலம் தடுக்கி
கால் உடையாது
காயும் கண்ணீரில்
கப்பல் போகாது என்
கண்மணியே கண்ணுறங்கு...
கண்ணுறங்கு வேளையிலே
என் கண்மூடி போகட்டும்
காலம் நேரம்
நீ மறந்து
காலமெல்லாம் நீ வாழவேனும்...
சீக்கிரம் கண்ணுறங்கு...
சின்ன பூவே-என்
சிங்கார கண்ணே
சீக்கிரம் கண்ணுறங்கு...-எங்
காதலியே கண்ணுறங்கு...
-விசித்திரக்கவி
Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...