ஐயனே...
ஆட்கொண்ட அறிய அருளே
அப்பரின் அன்பனே
சுந்தரனே சதாசிவா...
இப்பிறவியில் இல்லாத
பொல்லாத பிழையெல்லாம்
கொள்ளாத அளவு
அறிவிழந்து செய்தேனே...
உள்ளம் வேகுதே-உன்
கருணை தேடுதே
சிவசிவா என்கிறேன்
சீக்கிரம் வாருமையா...
வெண்நிற விடையேறி
பித்தனே பித்தனெனை
சித்தனென சிந்தை தெளிய
நாதனே நல்லருள் புரிவாய்...
நாயகனே நாயினன் நானே
அம்பலத்தானே என்னையாக்கியது நீதானே
நஞ்சனே நாகம் கொண்ட
பிஞ்சனே பிதற்றுகிறேன் நானே...
ஐயனே அல்லும் பகலும்
எனை ஆள்பவனே
அடி நெஞ்சில் ஆழ்ந்தவனே
அடியாரின் ஆண்டவனே...
காட்சிகள் ரெண்டினை கண்டேன்
கரமொன்றை நள்ளிரவில் கொண்டேன்
நந்தியினை நாதனெனே
நானும் நெஞ்சினிலே அடைத்தேன்...
சிவாயநம... சிவாயநம...
சிவசிவ என்றேன்
அபயமென உபயம் தந்தான்
உள்ளமெல்லாம் தேனூற
தேவனே ஜீவனானான்...
✍️விசித்திரக்கவி
Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...