ஆவணித் திங்கள்-என்ஐயம் தீருமா...!
கண்ணா...! கண்ணா...!
கண்ணெல்லாம் பாடுது
நெஞ்சமெல்லாம் வேகுது
அங்கமெல்லாம் அழுகுது
உன்குரல் திசைகேட்டு
செவிகள் ரெண்டும் ஓடுது,
உயிரும் வாடுது-அது
உள்ளூற உனை தேடுது...
ஆறுதல் சொல்ல
ஆகாயம் விட்டு வாராயோ...!
காற்றை கரைத்து
கீதமென சொல்வாயோ...!
மாயங்கள் பல புரிந்து
மானிடனெனை மயக்குவாயோ...?
மாயவனே மணிவண்ணா...?
பாரதம் கொடுத்தவனே பரந்தாமா...!
பாவியெனை பாரடா
பாரெல்லாம் கேளடா,
பட்ட துன்பம்
பாதி தருகிறேன்...
பாற்கடலே கதியென
பாம்பே பாய்யென
பக்கத்தில் தேவியென
பாதி உறக்கமேனடா...?
ஆட்டி வைப்பவனே-நீ
ஆட்டத்தில் வேடிக்கையா..!
ஆடுபவன் எல்லாம்
உன் கைப்பாகையா...?
ஆட்டம் முடியுமா-அது
அது அரங்கமேறுமா...?
ஆவணித் திங்கள்-என்
ஐயம் தீருமா...!
✍️விசித்திரக்கவி
Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...