தமிழே நீயும்...


எட்டய புரத்தானும்
எட்டாவதாக பிறந்தவனும்
கவிஞனாய் ஆகும்போது
ஏழை வீட்டில்
பிறந்த நானும்
கவிஞன் இல்லையா...

வார்த்தைகளையும் கற்பனைகளையும்
வாழ்வியலோடு வளைத்து
வர்ணங்களை கூட்டும்
கம்பனையும் வள்ளுவனையும்-போல்
நானும் தமிழை நேசிக்கலையா...

இல்லாத வீட்டில்
பொல்லாத பிள்ளை
பிறந்தா னென்று
தமிழே நீயும் தாயாகலையா...!

தவிக்கும் போதெல்லாம்
தாகத்தினை தீர்க்கலையா...!
தேன் கலந்து
தாய்தமிழை நீ ஊட்டலையா...!

செந்தமிழே சிந்தனையில் வைத்தேன்
செந்தீயில் தத்தளிக்க விட்டாயோ...?
அறிந்ததெல்லாம் தமிழே தமிழே
போற்றுவதெல்லாம் உன் புகழே...!

இளைய பிள்ளை
எடுப்பார் கைப்பிள்ளையென
தாயே நீயும்
எனை தள்ளிப் போனாயோ...!

ஆவென...ஓவென
நான் அழுது
உயிரும் உடலும் வியர்த்தால்
தாயே நீயும் தாங்கிடுவாயோ...!

பாண்டிய நாட்டு-எம் 
பவளக் கொடியே
பக்தனாய் நான் வாழ
பாரபட்சம் ஏனடி...?


             -விசித்திரக்கவி 

Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்