கலைமகளே பாரடி...
மாயையில் விழுந்தேனடி
மயக்கங்கள் கொண்டேனடி...
மாமனிதர் மத்தியிலே,
மடையனென தவழ்ந்தேனடி...
அறிந்ததென ஆயிரமும்
பாவங்கள் தானடி...
பாவலர் அகத்தினிலே,
நீ மட்டும் தெய்வமடி...
தேடித்தேடி அலைகிறேனடி
தெள்ளமுதே நீ எவ்விடம்...?
அவ்விடம் சொல்லடி
ஏறேடுத்து கொஞ்சம் பாரடி...
எண்ணங்களை தொலைக்கிறேனடி,
தொலைதூரம் நீயும்
போவதுதான் என்னடி...?
தீயிலெனை வாட்டுவது
நீயின்றி யாரடி...?
கண்ணிரெண்டும் நீயடி -என்
சிந்தையிலே வேறாரடி...?
கலைமகளே கண்
திறந்து பாரடி...
யான்பிரிந்த போதிலும்
நீயெனை மறப்பாயா...?
பிள்ளையெனை தாய்
நீ துறப்பாயா...?
வெண் தாமரை
பூ வெடுத்து,
செந்தாமரையடியில் அகரங்கள்
நான் சொல்ல
அருள்வாய் நாமகளே...
✍️விசித்திரக்கவி
அற்புதமான வார்த்தைக் கோர்வைகள் வாழ்த்துகள் - கில்லர்ஜி
ReplyDeleteஎல்லாம் அவள் அருளே...
Delete