கள்ளியாய் வில்லியாய் சாகசங்கள் போதுமடி...

வெண்சங்கு நீரெடுத்து
விண்மீனை பிரித்தெடுத்து
தேன்கலந்து கொஞ்சம்
தேகத்துக்கு உருகொடுத்தானா...!

வெண்ணிலவை விளக்காய் வைத்து
அங்கமெல்லாம் தங்கமென
அளந்து அளந்து
அசைவு கொடுத்தானா...!

இசைக்கு இசைவாய்
இடைக்கு கொஞ்சம்
இசைவு இசைந்து
இன்னிசை மீட்டுக்கிறாய்...

கண்களால் மத்தளம் கொட்டுக்கிறாய்,
காற்றைத் தொட்டு
களவரம் செய்து
கைதியாய் சிறையிலடைக்கிறாய்...


சின்னச் சின்ன
குறும்புகள் செய்கிறாய்
செவ்வானத்தில் செம்மீனை
ஏனடி தேடுகிறாய்...!

செய்வதெல்லாம் செவ்வனே
செய்து வைக்கிறாய்,
செவ்வந்தி பூக்களுக்குள்
சண்டையினை மூட்டுகிறாய்...!

புல்லாங்குழலாய் உன்
குரல் கேட்டு
பூக்கள் எல்லாம்
பூப்படைந்து பூக்கிறது....!

காய்க்காமலே அது 
கனி ஆகிறது...

கள்ளியாய் வில்லியாய்
சாகசங்கள் போதுமடி
என் சாதாரண கண்கள்
சத்தியம் தாங்காது...

                  விசித்திரக்கவி 

Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்