அத்தை மகள்
அத்தை மகள்
ஆத்து தண்ணியோ
அழகா சலசலக்குது
அத்தை மக
மேனியோ பளபளக்குது...
பட்டாம் பூச்சி
புதுசா கண்ணடிச்சி
பஞ்சு மெத்தையில்
நெஞ்சோடு ஒட்டிக்கிச்சி ...
எத்தனையோ நாள் ஏக்கத்துக்கு
இன்றைய இரவு
இலவம் பஞ்சுக்கு
இலக்கணமா மாறிபோச்சி...
கொஞ்சம் கொஞ்சமா
கொஞ்சலோடு கொஞ்சையில
கெஞ்சி கெஞ்சி
முட்டி தள்ளுறியே...
மிஞ்சி மிஞ்சி -போனா
பக்கத்துல வந்து
கண்ணத்த கடுச்சி
கண்ணால கொல்லுறியே..
பவள மல்லி
உதட்டுக்கு இளம்
பஞ்சு மிட்டாய்
சாயம் தான் ஏனடி...
சாயங்காலம் போயிடுச்சி
சாயமெல்லாம் வெளுத்துடுச்சி
செல்லமா சிணுங்கி
ஏன்டி சிலுத்துக்குற...
ஹ்ம்ம்...
சிங்காரி உன்
சின்ன உதட்ட
ஒட்டு மொத்தமா -நான்
குத்தகைக்கு எடுத்தாச்சி...
என்றும் தமிழோடு
@விசித்திரக்கவி

This comment has been removed by a blog administrator.
ReplyDelete