கூடவே வாரேன்

ஆத்து தண்ணி -மேல 
ஆலமர நிழலு 
அழகா நின்னு 
காத்தாற குளிக்குது... 

கால் வலிக்க -என்  
கவலையோடு காத்திருந்தேன்... 
அத்தை மகளோ 
அதிசய வெண்நிலவோ... 

ஆத்தங்கரை மேல 
கழுத்த வளைச்சி 
இல்லாத இடுப்புல -நீ 
இடையோடு இறுக்க... 

செப்பு குடம் -செய்த 
புண்ணியம் கண்டு 
இல்லாத ஆசையெல்லாம்
எங்கிருந்தோ ஓடிவருது...  

வளைஞ்சி நெளிஞ்சி -நீ 
குணிஞ்சி குடம் 
தூக்க ஐயோ-தாங்காதே 
என் நெஞ்சம் ... 

வெட்டருவா கண்ணால 
திட்டாத அயிரமீனு 
நாலு அங்கேயே -அண்ணம் 
தண்ணியிலாம செத்துப்போகும்... 

கண்ணால சாடை 
மட்டும் காட்டு 
குடத்து தண்ணியா 
கூடவே வாரே... 
 

             என்றும் தமிழோடு 
                     விசித்திரக்கவி 












Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்