சுமைதாங்கி

உன் கண்ணாடி பார்வையில் 

என் இதயம் உருபட்ட 

காயங்கள் சிலகோடி... 


தேனீகள் கட்டும் கூட்டில் 

உன் கள்ள பார்வைபட்டு 

கொப்பளித்த கொப்பளங்கள் பலகோடி... 


உடல் இட்ட முட்டை 

ஈட்டி பார்வை முட்டி 

அந்தரத்தில் சமைத்த மாயமென்ன... 


நரம்பின் நாளங்களில் ரத்தமில்லை 

ஆழ் கடலில் அமைதியில்லை 

எங்கும் எதிலும் நினைவில்லை... 


சொல்லும் சொல்லில் பொருளில்லை

செல்லும் வழியில் நீயில்லை -அதை 

சொல்லும் நிலையில் நானில்லை... 


நீல மேகத்தில் நிலவில்லை 

எரியும் தீயில் அனலில்லை 

உடலில் உயிர் இல்லை 

உணர்வில் உன்னத மில்லை... 


வசைப்பாடிய வார்த்தை கேட்டு 

வானவில்லில் ஏழு நிறமில்லை... 

இனி என்றும் உனை 

ஏற்கும் ஏகாந்தத்தில் யானில்லை... 


உன்னால் எதிர் வரும் 

என்காலம் சுமைதாங்கியாக மாறட்டும்... 








Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்