சொட்டும் காதல்துளிகள்

நட்சத்திரங்கள் வெள்ளி பந்தை பார்த்து காதல் பார்வையினை பொழியும் நேரமது... 

ஆம், அது ஓர் அதிகாலை பொழுது, 

மார்கழி மாதத்தின் மாபெரும் குளிரின் நடுக்கமும் அதன் தாக்கமும் அவன் உடலை ஏதோ செய்து கொண்டிருந்தது... 

சட்டென்று முந்திக்கூவியின் முணுமுணுத்தலில் கண்விழித்தவன் 

செய்வது அறியாது, அந்த ஒளி குறைந்து ஒளிரும் பல்புகளையே வெறித்து பார்க்கையில் என் மனது என்னிடம் தவறு செய்து விட்டாய் மாறா என்று என்னை திட்டிகொண்டிருந்தது... 

இன்றைய தேதியிலிருந்து சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்... 

நிற்க இடம் இல்லாமல் மிகுந்த வேகத்துடன் 5c என்ற பேருந்து கண்ணகி நிறுத்தத்தில் நின்றது... 

அலையும் அலை 

கடல் போல் 

ஆறடி கூந்தலும் 

காற்றிலே கூத்தாடுது... 


பொட்டு வச்ச 

பூந்தளிர் மேனியோ 

புழுதி பறக்க 

புல்லாங்குழலிசை பாடிவருது... 


கால் முளைத்த 

கன்னி இவள் 

வெள்ளைநிற தாவணியில் 

பிள்ளை அவள்... 


தேவதை அவளின் அழகை வரிகளாக வர்ணித்து தான் மனத்துக்குள்ளே கவிதையினை 

அரங்கேற்றிக் கொண்டிருந்தான் மாறன்... 


அடித்து பிடித்து ஏறினாள் 

தேவதை... 

பேருந்திலும் அவன் மனதிலும் தான்... 

கொஞ்சும் கண்களில் கொஞ்சம் பார்த்தால் என்ன குறைந்து விடுவாளா என்ற சிந்தனை மூலையை எட்டும் முன்... 


கொஞ்சும் கண்களில் 

கொஞ்சம் கோவம் 

கொப்பளிக்க தன் பார்வை 

கணைகளை  அவன் 

மீது தொடுதல் பூங்குழலி என்கிற குழலி...


பார்வை பட்ட நேரம் 

மாறன் மனதில் 

"கோவக்கார கிளியே "...

என்ற பாடல் ஒலிக்க அவளை 

தான் காந்த கண்களினால் முழுவதும் படம்பிடித்து கொண்டிருந்தான்... 


அவளோ இவனை 

மனதிற்குள் "பெரிய ஆணழகன்னு நெனைப்பு "...

"மண்டைய பாரு எப்படி ஆட்டுறானு 

இவனை"... 


என்று அவனை திட்டுவதுபோல் ரசித்து கொண்டிருந்தாள் குழலி... 


ஆம் இருவரும் ஒரே கல்லூரியில் பயின்ற  வெவ்வேறு துறைகளை சார்ந்தவர்கள்... 


குழலிக்கு மாறனை முன்னமே தெரியும்... 


குழலியின்  தோழியினுடை தூரத்து சொந்தகார பையன் என்று தோழி சுதா அந்த மாரியம்மன் திருவிழாவில் சொன்னதும்,  

அங்கு நடந்த சில நிகழ்வுகளையும் மனதிற்குள் அசைப்போட்ட படி 

ஜன்னல் வழியே தீண்டும் தென்றலுக்கு ஏற்றவாறு கூந்தலை ஒதுக்கிக்கொண்டிருந்தாள்... 


பேருந்து தன்னுடைய பயணத்தின் ஒரு கட்ட முடிவிற்கு வந்து நின்றதும்... 

இறங்கிய ஒரு சில மணிதுளிகளில் குழலி முன்செல்ல பின்தொடர்ந்தான் மாறன்... 


பூவை நோக்கி செல்லும் பூங்காற்று போல...

வண்ண மலர்தேடும் கருவண்டு போல... 

நிலவை தீண்டும் மேகம் போல... 


அவளின் பாதம் பட்ட இடத்தில் எல்லாம் இவன் பாதம் வைத்து அதற்கு சொந்தகாரன் என நிரூபித்து செல்கிறான்... 


கதவை திறந்தவள் சுற்றும் முற்றும் பார்க்கிறாள்...


"எங்கே போனான் இந்த கருவாப்பய"... 


என்று சொல்லி கொண்டே முகம் கழுவிவிட்டு சமயலறையில் இரண்டு கோப்பைகான தேனீர் தயார்செய்து 

கொண்டிருந்த வேளையில் சட்டென்று அவளின் இடையோடு பின்புறமாக அணைத்தான் மாறன்... 


அந்த எதிர்பாராத தீண்டலின் சுகத்தில் கொஞ்சம் நிலைகுலைந்து போனவள் கொஞ்சம் சுதாரித்து கொண்டு பொய் கோபத்தோடு

 "யாருடா நீ கருவா பயலே "...

இருடா எங்க மாமியாரை கூப்பிடுறேன் என்றாள்... 


"யாரு எங்க அம்மாவையா  கூப்பிடுடி இன்னிக்கி ரெண்டுல ஒன்னு பாத்துடுறனு "...

சொல்லி கொண்டே  தன்னுடைய முத்தத் துளிகளை அவள் காதருகே சிந்தி கொண்டிருந்தான்... 


அவளோ முத்தத்தில் மொத்தமும் தன்னை இழந்து மோகத்தில் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு அவனை தள்ளிவிட்டு தேனீருடன் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாள்... 


அவனோ அவளின் ஒற்றை  பார்வையின் அர்த்தம் புரிந்து 

அங்கே வந்து அமர்ந்தான்... 


சிறிது மவுனம் நிறைய கண்களினால் ஊடல்... 

"டேய் எரும உனக்கு எத்தனை தடவ சொல்லுறது" 

இன்னும் ஒருவாரம் தான பொறுத்துக்கோடா செல்லம், 

இது ஆடி மாசமா அதான் நம்பள தனித்தனியா பிரிச்சி வச்சி இருக்காங்க... 

"புரிஞ்சிகோடா என் தாங்கம்"

என்று தன் புருசனை கொஞ்சி கொண்டிருந்தாள் குழலி...

ஆம் அவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகவில்லை...

அதற்குள் ஆடி மாதம் தன்னுடைய ஆட்டத்தை அழகாக ஆடிகொண்டே இவர்களின் சின்ன சின்ன சேட்டைகளை சிரித்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது... 

மாறன் அடி பாவி உன்னை பாக்க எவ்ளோ கஷ்டபட்டு வந்தேன்... 

என் ஆபீஸ்ல கூட சொல்லாம வந்துட்ட... 

நீ வீட்டுக்கு போறான்னு சொன்னதும் நீ போற அந்த 5c பஸ்ஸ புடுச்சி உன்னை சைட் அடுச்சிகிட்டே வந்தா... 

இப்படி மோசம் பண்ணிறியே... 

"மாமா பாவம் இல்லையா"டி உனக்கு... 

இரு எனக்கும் ஒரு நாள் வரும் அப்போ பாத்துக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே கண்ணத்தை கிள்ளினான்... 

அப்போது "டேய் நீ எப்போ டா வந்த "என்று மீனாட்சி கேட்க மாறன் கொஞ்சம் பயந்து நடுங்கும் குரலில் "இப்போதான் கொஞ்ச நேரம் ஆச்சி"...மா என்றான்... 

குழலி எழுந்து வாங்க அத்தை...

இதோ காபி போட்டு வர இப்படி கொஞ்சம் உட்காருங்கனு  சொல்லி

உள்ளே தப்பித்து போய்விட்டாள்... 

இவனோ "அடி சண்டாளி இப்படிகோர்த்து விட்டுட்டாளே"என மனதிற்குள் கோபித்து கொண்டிருந்தான்... 

மீனாட்சியின் அடுத்தடுத்த கேள்விகளில் மாறன் எப்படி தடுமாறுகிறான் என்பதை அடுத்த பதிவில் காண்போம்... 

               என்றும் தமிழோடு                               விசித்திரக்கவி 































 




Comments

  1. என்ன கவிஞரே....!
    காதல் தொடருமென்று பார்த்தால்
    கல்யாணமே முடிஞ்சு போச்சே...!!!

    ReplyDelete

Post a Comment

வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்