Posts

Showing posts with the label கிராமத்துக் காதல் வரிகள் ...

காதல் தேவதையே

Image
காத்தோடு காத்தாக உனை தேடுறேன்... இராத்திரியில் உனை-தானே நெனைச்சி பாடுறேன்... உன்னோடு உன்னோடு-பெண்ணே  உயிர் கொண்டேன் உயிரோடு உயிரோடு-நான் உயிர்குலைந்து போறேன்... நினைவோடு நினைவாக நீந்திப் போகிறேன்... நினைவிலே நீ வந்தால்  நிம்மதி இலக்கிறேன்... விழிகள் யெல்லாம் வலியாலே வாடுதே வழிகள் இருந்தும்-உன்  விழிகளை காணலையே... சின்னச் சின்ன ஆசைகளில் நீ தானோ என்னை சிலிர்க்க வைத்தவள் நீ தானோ... இதயச் சுவரிலே உன் பிம்மம் சிதைந்து போகுதே என் இன்பம்... அந்தி சாயும் நேரத்தில் தான் -நான் அமராவதி கரையோரம் உனக்காக காத்திருக்கேன்... காணாமல் போன -எந்தன் காதல் தேவதையே இமைக்குள் நீயும் கொஞ்சம் வாயேண்டி... நான் இன்றாவது  தஞ்சம் கொள்கிறேன்...                  ✍️விசித்திரக்கவி 

மாமன் மகள்

Image
மதுரை மல்லியாய்  மணக்கும் சந்தனமாய்  மான்விழி பார்வையில்-எனை   மத்தாப்பாய் சுத்திடுவாள்   மந்தரை பெண்ணழகியோ   மயக்கும் கண்ணழகி  மாலை நேரத்தில் -என்  மாங்குயில் ராகமவள்  மாதுளை கன்னத்தில்  மாங்கனி சுவையாள் மச்சானை மயக்கி  மடியிலே சிறைபிடிப்பாள்... மார்கழி மாதத்து மாந்தளிராய் மின்னிடுவாள்  மஞ்சனையிலே நெஞ்சோடு  மாமனை அணைத்திடுவாள்  மயக்கத்தில் என்  மடி சாய்வாள்  மச்சத்தை காட்டி-என்   மனதை கட்டிடுவாள்  மாமான் மகளோ -என்  மாமான் மகளோ  மணி மணியாய்-பூ   மாலையாய் பூத்து  மாலையிலே காத்திருப்பாள்...   

விழிகள்

Image
  மானாக துள்ளும்  மயிலோட மச்சவிழி  பார்வை ரெண்டும்  மச்சான மயக்குதடி...  பவளக்கொடி கூந்தலுக்கு  முல்லைக்கொடி முந்திக்கிச்சி...  மல்லிகைச் செடியோ  மனசுகுள்ள கதறுதடி...  பட்டுப் புடவையில  பட்டாம்பூச்சி பறக்குதடி...  நானோ நூலறுந்த  பட்டம் போல திரியுற... அதிகாலை பனி -போல்  நெஞ்சமெல்லாம் குளிருது...  நினைவெல்லாம் அவளையே -சுற்றி  சுற்றி வருகுது... 

அத்தை மகள்

Image
 அத்தை மகள்  ஆத்து  தண்ணியோ  அழகா  சலசலக்குது  அத்தை  மக  மேனியோ  பளபளக்குது...  பட்டாம்  பூச்சி புதுசா  கண்ணடிச்சி  பஞ்சு   மெத்தையில்  நெஞ்சோடு  ஒட்டிக்கிச்சி ...  எத்தனையோ நாள்  ஏக்கத்துக்கு  இன்றைய  இரவு இலவம்  பஞ்சுக்கு  இலக்கணமா  மாறிபோச்சி... கொஞ்சம்  கொஞ்சமா  கொஞ்சலோடு  கொஞ்சையில  கெஞ்சி  கெஞ்சி  முட்டி   தள்ளுறியே...  மிஞ்சி  மிஞ்சி   -போனா  பக்கத்துல  வந்து  கண்ணத்த  கடுச்சி  கண்ணால  கொல்லுறியே..  பவள  மல்லி  உதட்டுக்கு  இளம்  பஞ்சு  மிட்டாய்  சாயம்  தான்   ஏனடி...  சாயங்காலம்  போயிடுச்சி  சாயமெல்லாம்   வெளுத்துடுச்சி  செல்லமா  சிணுங்கி  ஏன்டி  சிலுத்துக்குற...  ஹ்ம்ம்... சிங்காரி   உன்  சின்ன  உதட்ட ஒட்டு  மொத்தமா  -நான்  குத்தகைக்கு...

கிராமத்துக் காதல் வரிகள் ...

Image
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து எனும் மூச்சில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ... உங்கள் கருத்துகள் மூலம் உயிர் கொடுங்கள்... ஓர் இரவின் நட்சத்திர குளியலில்  தலைவனும் தலைவியும் பிரிவின் வலியை  பாடி தீர்கிறார்கள் ... இவ்வாறு ... கிராமத்துக் காதல் வரிகள் ... அடியே  அழகியே             (தலைவன்) ஐந்தடி  காப்பியமே             அசைந்தாடும்  ஓவியமே  வானத்து  வெண்னிலாவும்  வாய்ப்பிளக்கும்  அதிசயமே...  என்  வஞ்சிக்  கொடி  இடையே...  இக்உம்...             (தலைவி) அந்தி  நேரமும்  வந்தாச்சு  அகல்  விளக்கும்  வைச்சாச்சு  மச்சானை  பாத்தாச்சு மெத்தையும்  போட்டாச்சு...  அல்லி  ராணிய       அள்ளி  எடுத்தாச்சு  தொட்ட  இடமெல்லாம்  தொடர்  கதையாச்சு...  ஆசை  மச்சானுக்கு    (தலைவன்) அள்ளி  தந்தாச்சு  -இனி...