காதலனே...
ஆசை கள்வனே
அழகிய காதலனே
அகிம்சையாய் அழகிய
இம்சைகள் தந்து
அதிசயிக்கும் வேலையிலே -நானும்
ஆழ்கடலில் ஆடுகிறேன்...
இதோ பார்...
வெண்ணிலா வந்து
வெண்ணை கேட்டு
திண்ணையிலே என்னை
தினம் தினம் பாடுது...
தித்திக்கும் தமிழோ சத்தான
கவிதை தந்து...
திகட்டாத முத்தம்
தாவென கேக்குது...
தென்றல் வந்து
இதமாய் தீண்டி
எனை நித்தமும்
திண்டாட வைக்குது...
ஆறடி கூந்தலிலே
அருவியென விழுந்து
அதிகாலை வரை -இந்த
மல்லிகை மயக்குது...
மாலையிட்ட மன்னவனே
காலமெல்லாம் நீ காவலனே
எனக்கு மட்டும்
தினம் திருடனே...
சாம நேரத்து
சங்கீதம் கேட்டு
நட்சத்திரங்கள் ஓடிவந்து
எட்டிப் பார்க்குது...
முந்தி கொண்ட
கூரையோ முக்காடு
போட்டு முழுசா மூடிக்கிச்சி...
ஆசையெல்லாம் அழகா
தண்ணிமேல பக்குவமா
பத்திக்கிச்சி பக்கத்துல
நீ வந்தணைக்க
நிம்மதியாச்சி...
என்றும் தமிழோடு
✍️விசித்திரக்கவி...
ஆறடி கூந்தலிலே
ReplyDeleteஅருவியென விழுந்து
அதிகாலை வரை -இந்த
மல்லிகை மயக்குது...
அருமை கவியே...!
அவள் கூந்தலோ அருவியாய்
அதில் மல்லியாய் விழுந்தேனே...