இப்படியும் சிலர்

        27/02/21

விண்ணை முட்டும்
விரோத விமர்சனங்கள்
விசித்திர வீனனின்
வயோதிக வார்த்தைகள்...

இல்லாத மேடையில்
பொல்லாத கச்சேரி
சிங்காரியின் ஒய்யாரத்தில்
ஒட்டகம் சிறுத்துப்போச்சி...

பட்டம் பாடுதடி
பட்டாம்பூச்சியோடு பந்தயமாம்
பட்டம் பெற்றதால்
படம் காட்டுதடி...

ஐயோ!... பாவம்
பட்டமே நூலறுந்துப்போச்சி
பகட்டு வாழ்க்கையோ
பாதியிலே போச்சி...

வாய்முழுக்கப் பேச்சி-அதனால்
வயிறும் வத்திப்போச்சி...
போடா போடா 
இங்கே நானும் புத்தனடா...

           ✍விசித்திரக்கவி 




Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்