யாதொன்றும் இல்லை
மனமே... ஏங்குகிறேன்...
கேட்க யாருமில்லை
நாதியற்று கிடக்கிறேன்
நாளுமிங்கே தவிக்கிறேன்...
கதவுகள்பல தட்டினேன் -அது
வாசல் வரை
வாய் திறந்து
வாழ்த்திப் போனது...
யாரையோதேடி ஓடுகிறேன்
ஓட்டத்தின் நடுவே
ஆங்காங்கே விழுகிறேன்
மீண்டும் எழுகிறேன்...
மின்னலை பார்க்கிறேன்
மின்மினியை அணைக்கிறேன்
கானல்நீரை குடிக்கிறேன்
கலங்கித்தான் போகிறேன்...
காயங்கள் கண்டேன்
பிழைகள் கொண்டேனா
பித்தனாய் கொஞ்சம்
சித்தமிழந்து போகிறேன்...
உடலோடு வாழ்கிறேன்
உயிரை தேடுகிறன்
உணர்வுகளை வெறுக்கிறேன்
உலகமதில் ஊமையாகிப்போகிறேன்...
கண்டது சில கோடி
காணாதது பல கோடி
நம்பிக்கை கொண்டதால்
நான் மட்டும்
தெருக் கோடி...
அட போடி...
போன தெல்லாம்
போன பின்னே
நாமும் ஒருபிடி
சாம்பல் தானடி...
✍விசித்திரக்கவி
Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...