தாவணி நிலவே...
17/02/21
பாதகத்தி நீயும் -தான்
படபடக்கும் நெஞ்சத்தில்
படை யெடுத்தாய்...
பட்டாகத்தி இல்லாம- உன்
கூர்விழிகாட்டி பாவிநெஞ்சத்தை
பதற வைத்தாய்...
கரிசல்காட்டு பூவே -உன்
கண்ணிரெண்டில் விழுந்தேன்
அங்கேதான் இதயமிழந்தேன்...
இரண்டாம் நிலவே -என்
இம்சை ராணியே
அகிம்சையாயிம்சை செய்யாதே...
வராமல் வருகிறாய்
தாராமல் தருகிறாய்
தனியே தவிக்கிறேன்...
கனவுகளிலே மிதக்கிறேன்
நிஜத்தினிலே வாழ்கிறேன்
நித்தமுனை நினைக்கிறேன்...
உன்னைத்தான் சுவாசிக்கிறேன்
கூண்டுக்கிளியாய் உன்னுள்
அடைபட ஆசைகொள்கிறேன்...
தாவணி நிலவே
சொட்டும் மழையே
குளிரும் அகலே...
குட்டி தேவதையே
குறும்பு சிரிப்பே
வெட்க சரலே...
வெப்ப சலனமே
வீசிவரும் காற்றே
உன்னாலே வாடுகிறேன்...
உன் பெயரையே
தினம் படுகிறேன்
திக்கிழந்து திரிகிறேன்...
தீயாய் எரிகிறேன்
என்னையே வெறுக்கிறேன்
உன்னையே தேடுகிறேன்...
அணைக்க வந்திடு
ஆகாசம் விட்டு
சுவாசம் தந்திடு...
அனைத்தும் நீயே ஆகிடு
பார்வையின் அர்த்தம்தனை
பாவை நீயும் கூறிடு...
போதும் போதும்
என்னுள் வாழ்ந்திடு
புது வார்த்தைகளை சொல்லிடு...
நினைக்க நினைக்க -உன்
நினைவுகள் நீள்கிறது
கவிதைகளாயது வளர்கிறது...
வாடிப்போகும் முன்னே
வரமொன்றை வழங்கிடு
வாழ்க்கை துணையாய்
வாழும்வரை எனை ஆண்டிடு...
✍விசித்திரக்கவி
Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...