விடிய போகுது வா...

புதியதொரு காலை-இனி 
புதியதாய் பூக்கட்டும்
புதுமலரின் வாசம்
பூலோகமெல்லாம் வீசட்டும்...

வெற்றிநடை போட-நீ 
வீரத்தோடு விளையாடு
நம்பிக்கையொன்றே நிரந்தரம் -இங்கே
நாளுமது சுதந்திரம்...

உன்பெயரை சுமக்க
இமயம் ஏங்கிகிடக்குது
உன்வெற்றியை கொண்டாடவே
கடல் ஏழும் காத்துக்கிடக்குது...

வாழ்க்கை ஒருமுறை தான்
வாழ்ந்தே தீர்ப்போம் வா...

                  ✍️விசித்திரக்கவி



Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்