தேடுகிறேன்...

என்னை நானே
இழந்து தேடுகிறேன்...
எப்படி இழந்தேன்
யாருக்காக இழந்தேன்...

எதற்காக இழந்தேன்-என்பதை
அறிந்தவர்கள் அறிந்த பின்னும்
அகந்தையில் பேசுகையில்-நான் 
அர்த்தமற்று போகிறேன்...

அந்த நேரமே
அடிவயிற்றில் ஆயிரம்
இடி விழுந்தாற்போல்
அதனை வலி...

எப்படி சொல்வேன்
எனக்கும் மனசுண்டு என்பதை...

Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்