நான்

                 22/2/21


கவலைகளை நான்
கடன் வாங்கிவிட்டேன்
கற்பனைகளை கண்ணாடி
குடுவைக்குள் தொலைத்துவிட்டேன்...

காரணங்களை தேடி
கண்ணீரோ...
உலா போகிறது...
சத்தமின்றி மீண்டுமது
எனையே அணைக்கிறது...

தழுவிய காயங்கள்
தாங்கிய மார்புகள்
தவித்த இதயம்-அது 
தாங்காத துயரம்...

தொலைவாய் போகிறேன்
தொலைந்தும் போகிறேன்
தொலைதூர நிலவாய்
துக்கம் கொள்கிறேன்...

துடித்தும் பார்க்கிறேன்
துளிர்த்தும் பார்க்கிறேன்
துணிவு இழந்து
தூனாய் நிற்கிறேன்...

அழுகவே அதிகம்
ஆசை கொள்கிறேன்
இரவெல்லாம் முயற்சித்து
இறுதியில் தோற்கிறேன்...

ஓய்வின்றி அழுகிறேன்
ஆராவாரம் இல்லையாம்...
ஆத்திரத்தின் உச்சியில்
சூத்திரம் தவறாம்...

சுற்றிச் சுற்றி
சுகங்களை பார்க்கிறேன்
சுதந்திர வானிலது
சூனியமாய் போனது...

இருந்தும் இருக்கவே
இறுதிவரை முயல்கிறேன்...
மூச்சொன்று உள்ளவரை
முழுமையாய் இருப்பேன்...

           ✍விசித்திரக்கவி










Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்