கூடல் பொழுதுகள்
கூடல் பொழுதுகள்
உதடுகள் நான்கும்
ஊஞ்சல் ஆட
உடல்கள் ரெண்டும்
உருமாறி உருகிப் போகட்டும்...
இமைகள் எட்டும்
கொஞ்சம் மூடட்டும்
இரண்டாம் உலகம்
இன்றே காணட்டும்...
காற்றும் கலங்கட்டும்
காதலன் காதலி
தேடி ஓடி
சிட்டாக ஒட்டட்டும்...
பட்டுடல் பட்டுப்-போல்
பின்னட்டும் தொட்ட
இட மெல்லாம்
தேனாக சொட்டட்டும்...
மின்மினி மட்டும்
மின்னட்டும் ஆசைகள்
எங்களை போல
கட்டிலில் துள்ளட்டும்...
என்றும் தமிழோடு
@விசித்திரக்கவி...

Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...