என்னவளோடு என் தனிமை பொழுதுகள்
அம்புலியின் காதலி
கண்ணடித்த நேரமோ
வைகறையின் தொடக்கம்...
நெடுந்தூர பயணதின்
அகலச் சாலையில்
அகல மறந்த
தென்றலின் தீண்டல்கள்...
வரவேற்கும் மரங்கள்
வந்தனம் பாடும் பட்சிகள்
தூங்கும் நிழல்கள்
தொங்கும் கூடுகள்...
அவளின் ஊடல்களோ
என்காதோடு தான் கூடல்கள்
கொஞ்சலோடு அணைப்பாள்
கொஞ்சமாய் சிரிப்பாள்
கோவதில் லேசா கடிப்பாள்
கன்னத்தில் இதழ்களை
அவிழ்ப்பாள்...
உடனே கேட்பாள்
எத்தனை என்பாள்
சொன்னால் முறைப்பாள்
சொல்ல மறுத்தால்
சிரத்திலே சின்னதாய்
அடிப்பாள்...
கிள்ளினால் சினுங்குவாள்
ரசித்தால் மருகுவாள்
நகர்ந்தால் பிடிப்பாள்
ராட்சசி இராந்தலின்
ரகசியத்தில் இன்னும்
எத்தனையோ செய்வாள்...
இந்த கவிதை என் கற்பனையில் என்னவளின் சில செய்கைகளை
ரசித்து இறுதியில் நானே கவிஞன் ஆகிறேன் ...
என்றும் கற்பனையின் விளிம்பில்
_விசித்திரக்கவி
Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...