கூடல் பொழுதுகள்

 கூடல் பொழுதுகள் 


கண்ணயரும்  வேளையிலே 

கன்னியவள்  கால்கொலுசு  கலகலக்க 

காதோரம்   இன்பக் 

காணம்  கரைய... 


கன்னியவள்  சிலையென 

கண்ணனிவன்  சிற்பமென 

கண்ணடாதோர்  காவியம் 

கலைந்ததோ  ஓவியம்... 


தீராதாகமென  மேனி 

கடற்கரை  போலே... 


விடியா  வானம்

விடியும்  வரை 

வீணையின்  ராகம் 

நாடிநரம்பெல்லாம்  நர்த்தனம் 

நொடிக்கு  நொடி 

ரதியவளின்  கீர்த்தனம்... 


மஞ்சணையிலே 

மன்மதனின்  மத்தளங்கள் 

மாங்கனி  அவளின் 

மாதுளை  கன்னங்கள்... 


அடடா,  இரகசிய 

இரவினில் எத்தனை எண்ணங்கள்....


போடா,   இதில்  

இத்தனை  இன்பங்கள்... 


மதியது  மத்தியிலே 

மங்கைக்கு  இடையினிலே 

போடா, 

நான் மட்டும் 

இன்பக்  நடுக்கடலினிலே... 


தொடையழகா  இல்லை 

இந்த  இன்ப

கவிநய  நடையழகா... 


பாவழகா  இல்லை 

இந்த  பருவ  பாவையழகா... 


இவள்  சொல்லழகா  இல்லை 

இந்த  பளிங்குச்  சிலையழகா ...


மதி   மங்கும்  வேளையிலே 

மதி  மயங்கிய  நிலையினிலே 

மாது  அவள் 

மது  ரசம்  தந்தாள்... 


அடடா,  

நான்  சிற்றின்ப  ரசிகனடா... 

அதனால்  நனென்றும் 

இளைஞனடா...


                                                            என்றும்  தமிழோடு 

                                                                          -விசித்திரக்கவி...

Comments

  1. அடடா, இரகசிய

    இரவினில் எத்தனை எண்ணங்கள்....



    போடா, இதில்

    இத்தனை இன்பங்கள்...

    தமிழிலா இல்லை தலைவியிடமா...!?

    ReplyDelete

Post a Comment

வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்