நவீன நாகரிகம்

வாசகனும் வாசகியும் தருகிற கருத்து எனும் மூச்சில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ... உங்கள் கருத்துகள் மூலம் உயிர் கொடுங்கள்...



நவீன நாகரிகம் 

குலையும்  மார்காட்டி 
குலையாத  இடைகாட்டி 
தொடுத்  திரையில் 
தொப்புளையும்  காட்டி 
தொடை  தொட 
உடை  காட்டி 
வண்ணத்  திரையில் 
வளமை  உடல்  காட்டி 
சரித்திரத்தில்  என்ன 
சாதிக்க  போகிறீர்கள்... 
உணவுக்கு  உடல் 
விற்ற  வேசி  கூட 
நான்கு  சுவற்றுக்குள் 
நாகரிகமாகத்  தான் 
நடக்கிறாள்... 
உங்களின் 
உல்லாச  உணர்வுக்கு 
பிஞ்சுகளின்  பார்வையில் 
மார்வாடிக்  கடையில் 
மானம்  விற்ற 
மங்கையராய்  மணக்க 
வேண்டுமா... 
இன்றைய  காணொளி 
நாளைய  உன் 
மகனும்  மகளும் 
காணலாம்... 
ஜாக்கிரதை...

                                           என்றும் தமிழோடு 
                                                    விசித்திரக்கவி...

Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்