விசித்திரக்கவியின் அறிமுகம்
விசித்திரக்கவியின்
கவித் துளிகள்...
அறிமுகம்
என் முத்தமிழோடு அறியா வயதில் எழுத்தாணிக் கொண்டு வெள்ளை காகிதங்களில் நான் போட்ட துள்ளல் விளையாட்டுகள்...
பிழைகள் இருப்பின் தமிழ் கற்ற சான்றோர்கள் அறியா சிறுவன் இவன் தமிழோடு கற்று கைவீசி விளையாட வந்துள்ளான் என நினைத்து கொஞ்சம் விளையாட்டை ரசித்து உங்களின் கனிவான கனிந்த சிந்தனைகளை கொஞ்சம் எனக்கும் கற்பித்துச் செல்லுங்கள் ...
தமிழோடு விளையாட விதி செய்த என் அன்னை முதல் அறிவுசார் ஆன்றோர் அகில மாந்தர்
அனைவருக்கும் என் அன்பு கலந்த கோடான கோடி நன்றிகளோடு என் வணக்கத்தையும்
உரித்தாக்கி கொள்கிறேன் ...
என்றும் தமிழோடு நான் விளையாட அருள் புரிவாய் அன்னை தமிழே...
வாழ்க உன் புகழ் ...
வளர்க தமிழ் மக்கள் ...
இப்படி சூழ்நிலைகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களில் நானும் ஒருவன்.என் மன நிம்மதிக்காக காகிதங்களில் எழுதி அதனை வாசித்து ஆறுதல் தேடி கொண்டிருந்த கால கட்டத்தில் கண்ணதாசன் என்ற உண்மை மனிதனை அடையாளம் கண்டு அவன் கவி மழையில் நனைவதுவும் தென்றலோடு கைவீசி நடப்பதுவும் மனதினை துன்ப கடலில் இருந்து அதனை கரையில் சேர்க்க அவரது வரிகளை துடுப்புகளாக கொண்டு ஆறுதல் தேடி இறுதியில் தமிழோடு என் துயரங்களை மறந்து கைகோர்த்து இன்று வரை விளையாடி வருகிறேன்...
இங்ஙனம்
தமிழோடு நான்
விசித்திரக்கவி.

அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்
அறிமுகம் வாசித்தேன் கவியே...
ReplyDelete