தீயாய் தென்றல்

வாசகனும் வாசகியும் தருகிற கருத்து எனும் மூச்சில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ... உங்கள் கருத்துகள் மூலம் உயிர் கொடுங்கள்...


தீயாய் தென்றல் 

என்னவனே ...

தென்றல்  வந்து 
தீண்டி  தீண்டி 
தினம்  தினம்  -நானும் 
தீயில்  பாய்கிறேன்... 

தேடித்  தேடி 
தேய்ந்து  தொலைக்கிறேன்
தீவாய்  நானும்  -உன் 
நினைவில்  போகிறேன்...

சாரலோடு  சண்டை  போட்டு 
புயலோடு  புல்லாங்குழல்  -கொண்டு 
பொழுதெல்லாம்  பூவே 
உன்னோடு  புலம்புகிறேன்...

புன்னகை  யெல்லாம் 
நீ  பறிக்க- 
நிழலாய்  நானும் 
சாய்ந்து  சாகிறேன்... 

காற்றோடு  கரைந்து 
தீயினை  தீண்கிறேன்
நீரிலே  நடந்து 
நிலத்திலே  நீந்துகிறேன்... 

நான்  இல்லாமல்
நீயாய்  தவிக்கிறேன்... 
கனவோடு  காய்ந்து 
நிஜத்தினிலே  நனைகிறேன்... 

காகிதத்தோடு  கனைத்து 
காலத்தோடு  கை கோர்க்கிறேன்
கண்ணே  உனை-காண 
காதலோடு  வருகிறேன்... 

மன்னவனே ...
உன்னோடு  உயிர் 
கொண்டு  உறவாட 
உயிரே  உறைவேன் 
உணர்வாய்  நானே...

                        என்றும் தமிழோடு 
                               விசித்திரக்கவி









Comments

  1. காகிதத்தோடு கனைத்து
    காலத்தோடு கை கோர்க்கிறேன்
    கண்ணே உனை-காண
    காதலோடு வருகிறேன்...


    மனதை தொட்ட வரிகள்...

    ReplyDelete

Post a Comment

வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்