கிராமத்துக் காதல் வரிகள் ...
வாசகனும் வாசகியும்
தருகிற கருத்து எனும்
மூச்சில் தான்
இந்த படைப்புகள்
சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயிர் கொடுங்கள்...
ஓர் இரவின் நட்சத்திர குளியலில்
தலைவனும் தலைவியும் பிரிவின் வலியை
பாடி தீர்கிறார்கள் ...
இவ்வாறு ...
கிராமத்துக் காதல் வரிகள் ...
அடியே அழகியே (தலைவன்)
ஐந்தடி காப்பியமே
அசைந்தாடும் ஓவியமே
வானத்து வெண்னிலாவும்
வாய்ப்பிளக்கும் அதிசயமே...
என்
வஞ்சிக் கொடி இடையே...
இக்உம்... (தலைவி)
அந்தி நேரமும் வந்தாச்சு
அகல் விளக்கும் வைச்சாச்சு
மச்சானை பாத்தாச்சு
மெத்தையும் போட்டாச்சு...
அல்லி ராணிய
அள்ளி எடுத்தாச்சு
தொட்ட இடமெல்லாம்
தொடர் கதையாச்சு...
ஆசை மச்சானுக்கு (தலைவன்)
அள்ளி தந்தாச்சு -இனி
இரவு விடிஞ்சதான்
நமக்குள் பேச்சுனு வைச்சாச்சு...
ராத்திரிக்கு இரவிக்கை
வேணாண்டி...
ராசா நீ இருக்க (தலைவி)
இரவிக்கை எதுக்கடி...
ஓ ஹோ... (தலைவன்)
மல்லிய பூ
ரெண்டு குத்துதடி...
மனசு குள்ள
குண்டு வெடிக்குதடி...
கட்டிலுக்கு கால் (தலைவி)
வலிக்குதய்யா
கட்டழகு இன்னும்
ஏங்குதய்யா...
ஹ்ம்ம்... (தலைவன்)
கைபட்ட இடமெல்லாம்
நோகுமடி இதழோடு
இதழ் இணையட்டுமடி...
மாமனே... (தலைவி)
இன்னிக்கு மட்டும்
என்னோடு விளையாடு
உறவோடு நின்றாடு
நெஞ்சோடு கொண்டாடு...
தர ரர தர ரர
ரர ரர ரா...
அடியே அழகியே (தலைவன்)
ஐந்தடி காப்பியமே
அசைந்தாடும் ஓவியமே
வானத்து வெண்னிலாவும்
வாய்ப்பிளக்கும் அதிசயமே...
என்
வஞ்சிக் கொடி இடையே...
தர ரர தர ரர
ரர ரர ரா...
என்றும் தமிழோடு
விசித்திரக்கவி ...

Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...