காதலனின் காத்திருப்பு...


வானவில்  போல 

வாழ்ந்து  போனவளின் 

வார்த்தைகளை  வண்ண

வண்ண  மைகளால் 

வரிசையாக  கோர்த்தேன் 

வரிகளானது... 


வரிகளோடு  கொஞ்சம் 

வர்ணனைகள்  கூட்டி

வர்ணனைகளுக்  கிடையே 

வற்றாத  நினைவுகளின் 

வலியை  கொட்டினேன்

கவிதைகள்  ஆனது... 


வாசித்தவர்  எல்லாம் 

வாழ்த்துக்களை  வழங்கி 

வாழ்த்திச்  செல்ல - நானோ 

வார்த்தைகள்   யின்றி... 


வசந்தத்தின்  வசந்த  மகள் 

வருவாளோ  என்று 

வாசற்படி  ஓரமாய் 

வாயடைத்து  காத்திருக்கிறேன் 

வழியும்  கண்ணீரோடு...


                 என்றும்  கற்பனையின் விளிம்பில்

                                      ❤விசித்திரக்கவி



Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்