வசதி
வசதி வசதி
என்பதெல்லாம் வசதியோ...
வாடகை உடம்புக்கு
வற்றாதாசை வசதியோ...
அங்கமெல்லாம் தங்கமாய்
மின்னுவது வசதியோ...
கூரைகள் மின்னும்
வைர மாடமாளிகைகளில்
வசிப்பது வசதியோ...
வளைத்தலுக்கு ஏற்றாற்போல்
மானுடர்களை வளைக்கும்
பணமோ வசதி...
இல்லை இல்லை
இதுதான் வசதி...
உறவுகளுடன் உணர்வாய்-உயிர்
உள்ளவரை வாழ்வது வசதி...
உழைப்பிற்கு ஒத்தாசையாக
உடல் ஒத்துழைப்பது வசதி...
சிந்திக்க கிடைக்கும்
கல்வி வசதி...
செயல்படுத்த கிடைக்கும்
அறிவு வசதி...
வெற்றிக்கு தோல்விதான்
ஆகச்சிறந்த வசதி...
நல்லவனோடு உலகை
சேர்த்து ரசிப்பது வசதி...
இறுதியில் ஆறடி
இடம் கிடைத்தால்
வசதியோ வசதி...
✍விதித்திராக்கவி
Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...