ஒருதலைக் காதல்

ஆயிரமாயிரம் அழகிகளும்

அசந்து பார்க்கும்

அழகின் உச்ச 

அதிசயம் அவன்...


அரும்பு மீசையில்

குறும்பு சிரிப்பில்

எனை கொள்ளையடிக்கும்

கருப்பு பேரழகன்...


பார்த்து பார்த்து

பக்குவமாய் வைத்தேன்

வைத்ததில் யெல்லாம் -உன்

நினைவையே வைத்தேன்...


உனை நினைத்து

மருதாணி செடியோரம்

மயங்கி நிற்க்கிறேன் 

பளிங்கு மேனியெல்லாம்

சிவந்து  வெட்குகிறேன்...


தினம்தினம் பார்க்கிறேன்

தீயாய் ரசிக்கிறேன்

உன்னைத்தானே நேசிக்கிறேன்

கனவிலே வாழ்கிறேன்...


ஏந்திழையாள் ஏங்குகிறேன்

ஏக்கமது காணலையோ

கருமைநிறக் கண்ணா -உன்

கண்மணியை தேடலையோ...


இரட்டை  கண்களால்

சுட்ட சூரியனாயிருந்தும்

சுற்றிசுற்றி வரும்

சூரியகாந்தியெனை பார்கலையோ...


வண்ண மலரோடு

வஞ்சி நானிருந்தும்

வண்ணத்தோகை விரித்தாட

மயிலோன் நீ வாரலையோ...


காக்க வைச்சது

போதுமடா மச்சான்

காலம் நேரம்

கூடி வந்தாச்சி...


காதலையும் காதோடு

கனிவாய் பாடியாச்சி

இனி நீயும்

கார்கால மேகம்போல்

கண்ணே எனைத்தேடிவா...


காதலோடு காத்திருக்கேன்

கண்ணா நீயும்

பூ முடிக்க

பூமாலையாய் பூத்திருக்கிறேன்...


                ✍விசித்திரக்கவி




 


Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்