காதலை மறைத்த தோழிக்கு
சாயும் போதெல்லாம்
தோள் கொடுத்தேன்
துடிதுடிக்கும் போதெல்லாம்
தூறல்மழையாய் துள்ளவைத்தேன்...
மடிமீது சாய்கையில்
அன்னையும் ஆனேன்
எல்லைமீறும் போது
அண்ணனும் ஆனேன்...
துயரமென்றால் தூக்கிப்
பிடிக்கும் தந்தையுமானேன்
நிலவாய் நீயிருக்க
நீல வானமானேன்...
தினம் தினம்
நீ பார்க்கும்
பிம்பத்தின் அழகிய
கண்ணாடியு மானேன்...
நீயும் நானும்
நிழலும் நிஜமென
நிறைந்தே வாழ்ந்தோம்...
நீரோடு கயலாக
அவனோடு அவளாக
உயிரோடு உறவாக
மனதோடு போனாய்
விழி நீரோடு
விதியாலே நின்றேன்...
எல்லாம் நானாய்
துணை யிருக்க
கள்ளி நீயும்
காதலை மட்டும்
கல் மனத்தோடு
மறைத்த மாயமென்ன...
இருவிழியாக இருந்தாலும்
பார்வையிலே பாகுபாடு
என்னோடு உண்டோ...
மறைத்தவள் நீயும்
மறந்து போக
உன் மனமறிந்த
தோழன் நானும்
கொஞ்சம் மறுத்துப்போகிறேன்...
✍விசித்திரக்கவி
Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...