இப்போதே வருக...

தள்ளாடும் வயதில்
தடி கொண்டு
தள்ளாடி தலைகவிழ்ந்து
தவழ வேண்டாம்...

கைகள் நடுங்கி
உடல் ஒடுங்கி
குரல் மங்கி
தோல் சுருங்கி

நோய் உண்டு
பால் உண்டு
பாயிலே பிரண்டு
இளமை போய்

முதுமை வந்து
கால் வழியே
சலசலவென இறங்கி
அங்கண வாடை வேண்டாம்...

சுயம் மறந்து
சுற்றம் துறந்து
நினைவு இழந்து
நித்திரை பறந்து

நிம்மதி இழந்து
நொந்து நான்
போக வேண்டாம்...

வலிமை உள்ள போதே
உள்ளம் தெளிவுள்ள போதே
கூற்றுவன் நாள் கூட்டி
கூட்டிப் போக வருக...

தடி கொண்டு
தள்ளாடி தலைகவிழ்ந்து
தவழ வேண்டாம்...

கைகள் நடுங்கி
உடல் ஒடுங்கி
குரல் மங்கி
தோல் சுருங்கி

நோய் உண்டு
பால் உண்டு
பாயிலே பிரண்டு
இளமை போய்

முதுமை வந்து
கால் வழியே
சலசலவென இறங்கி
அங்கண வாடை வேண்டாம்...

சுயம் மறந்து
சுற்றம் துறந்து
நினைவு இழந்து
நித்திரை பறந்து

நிம்மதி இழந்து
நொந்து நான்
போக வேண்டாம்...

வலிமை உள்ள போதே
உள்ளம் தெளிவுள்ள போதே
கூற்றுவன் நாள் கூட்டி
கூட்டிப் போக வருக...



                        ✍️விசித்திரக்கவி 

Comments

Post a Comment

வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்