புதிய நாடு 3

                  30/01/21

                  ✍விசித்திரக்கவி 


அன்றைய நிகழ்வு அவனது மனதிற்குள், ஓயாமல் அடிக்கும் அலைகளை விட,
கடும் சுனாமியின் சீற்ற அலைகளாக அடித்து கொண்டிருந்தது...

பிஞ்சு மனதிற்குள்ளும் எரிமலையும் வெடிக்கும் என்பது, அன்று அவன் கண்களில் மூலம் கர்ச்சித்தது...

அசகாய சூரனெல்லாம் அடங்கி போகும் அளவுக்கு கண்களில் ஒரு மாபெரும் பார்வை...

ஜான் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை அல்லவா...

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்றுள்ள சில வெள்ளை மனம் கொண்ட மாமனிதர்களும், மகத்தான அரசியல் தலைவர்களும் நிலமையை கண்டு கண்ணீர் வந்தும் காட்டாமல், வயிற்றின் பாட்டையறிந்து இயன்றதை கொடுத்து உதவினார்கள்...

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் தரமாட்டான் என்னும் முதுமொழிக்கேற்ப்ப,
உதவியக் காரங்களின் கருணைகள் யாவும், அதை கண்கானிப்பவனின் கைக்குள் அடக்கமாகி போவதை கண்டால், கண்களே குருடாகி இருக்கலாம்
என்றே மனம் கொதிக்கிறது...

எழுத்துக்கள் மூலம் பார்க்கும் நமக்கே இப்படி என்றால் இழப்பில் உள்ளவனின் உள்ளத்தில் எப்படி இருக்கும்,இடி விழுந்த தழும்பினை விட பயங்கரமாக இருக்கும்...

இதோ பார்த்தீர்களா ஆதவனை அடித்து துரத்தி ஆகாச ராணி ஒய்யாரமாய் இரங்கற் கூட்டத்திற்கு முந்தியடித்து முன்னிருக்கையில் இரவுக்கு முன்னமே
முனங்கி கொட்டிருக்கிறாள் இரங்கற் பாவின் தொடக்கத்திற்காக...

இரங்கற் பா இப்படி தொடங்குகிறது...

இரவு நேர கலவரம் என்பதால் எங்களின் கரம் உங்களின் பாதுகாப்பிற்கு நீளாமல் போய்விட்டத்தை நினைத்து வருந்துகிறோம்...

கலவரத்திற்க்கான காரணம் என்ன என்பதையும், யார் மூலம் நிகழ்ந்தது என்பதையும், அதன் மூலலாபம் என்ன என்பதையும், மிக விரைவில் இரவு பகல் அயராது கண்விழித்து கண்டுபிடித்து அதற்கான தண்டனையும்,அவர்களையும் உங்கள் கண் முன் நிறுத்துவோம்,என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொண்டு,

எங்களின் ஆழ்ந்த இரங்கல் மூலம் இறந்தவர்களின் ஆன்மாகள் இறைவனடி இளைப்பாற பிரார்த்திக்கிறோம் என்று ...

கதர்சட்டை அணிந்தவரின் கண்ணியமான  பேச்சில் கவிழ்ந்த மக்கள் ஏராளம்...
கண்ணீர் விட்டவர்கள் தாராளம்...

கூட்டத்தின் நடுவே ஒரு குரல்...

கலவரம் கனவாகவே போகட்டும் எஞ்சியவர்களின் வாழ்வது பிழைக்க அரசாங்கத்தின் திட்டம் என்ன...?

எங்களின் அடிப்படை தேவைக்கு என்ன தீர்வு...?

சற்றும் எதிர்பாராத கேள்வியினால் கதர் சட்டைக்குள் கங்கை நதியின் ஓட்டம்...

நெற்றி முதல் கால் வரை ஓர் ஆட்டம்...
அது பதில் இல்லாததின் திண்டாட்டம்...

மூளையின் ஏதோ ஒரு மூலையிலிருந்து,
நிரந்தரமில்லாத பதிலொன்று வாய் தவறி வாய் வழியே,

நகரத்தின் மொத்த சேதாரமும் அரசின் கணக்கெடுப்பு அறிவிக்கையின் அறிவிப்புக்கு பின்,

நிச்சயம் உங்களுக்கான பதில் உங்களை வந்து சேரும் என்பதை உங்களிடம் உரைப்தில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்...

என்ற மகத்துவம் பொருந்திய மகத்தான இரங்கற்பாவின் கூட்டம் இத்துடன் இனிதே முடிந்தது மேடையின் மேல்...

அக்கூட்டத்தில் கூத்தாடி ஒருவனின் மனம் குமுறுகிறது,மேடையின் மேல் இவன் என்னை விட மிகப் பெரிய கூத்தாடி என்று...

நான் சிரிப்பிற்காகவும் வாழ்க்கையின் சிறப்பிற்காக்கவும் அடிவயிறில் எரியும் நெருப்பினை மறைத்து முகத்தில் சாயம் பூசியவன்...

இவன் சாயம் பூசாமலே எங்களின் வாழ்க்கையை அடிக்கிறானே...

பாவம் பணத்தை சாப்பிட வேண்டும் என்ற பசியில் இப்படி பேசுகிறான்...

இதற்கு அரசாங்கத்தின் முதுகெலும்பும்,
மக்களின் கடைசி நம்பிக்கையுமான நீதி மன்றத்தில் வேறு தண்டனை கிடையாதே...

தான் யார் என்பதையே மறந்து,
பித்து பிடித்தவன் செய்கின்ற செயலுக்கெல்லாம் அவன் பொறுப்பல்ல, என்ற அறிய சட்டமே அவனை இன்னும் பல ஆண்டுகள் வாழ வைக்க நேரிடுமே...

இச்சட்டத்தில் கடவுளையே காப்பாற்றியதாக ஒரு சில சலசலப்பை கேட்டதுண்டு நான்...

என்ன நடந்தாலும் இனி என்னால் என்ன செய்ய முடியும் ஆடும் காலையும் கலவரத்தில் யாரோ ஒரு அதிசய கள்வன் ஒருவன் அறிவாள் கொண்டு களவாடிவிட்டானே...

அந்த அறிய சதை அவன் பசிக்குது போதுமா, இல்லை இன்னும் வேண்டுமென வந்தாலும் கொடுக்க இன்னொரு கால் காத்துக் கொண்டிருக்கிறது என்னிடம்...

இந்த முறை பகலில் வந்தால் அந்த திருமுகத்தை காண ஒரு வாய்ப்பாவது கிடைக்கும் என்று தன்னுடைய குமுறலையும் ஆதங்கத்தினையும் வலி கலந்த சற்று மென் குரலில் உளறி கொண்டிருந்தான்...

சிறுவனும் கேட்டபடியே கேழ்விரகு கஞ்சிக்கு காத்துக் கொண்டிருந்தான்...

அவன்,நேற்றைய இரவில் அவன் அம்மாவின் கையில் நெய்சோறு உண்டதே கடைசி அல்லவா...

பாவம்,கொடுமையின் வலிகளை விட பசியின் வலி கொடியது அல்லவா...



Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்