ஆண்

அவனாய் அவனில்லை
அவனாய் இருந்தும்
அழுவதற்கு ஏனோ
ஓர் வழியில்லை...

ஆயிரம் கரம்கொண்ட
ஆகாயச் சூரியனையும்
இரு கரம்கொண்டு
இருக்கி பிடிப்பான்...

ஆண்மகன் தானென
அடையாளம் கண்ட
நாள்முதல் அவனுக்கு 
நித்திரை யேது...

சித்திரை வெயிலானாலும்
சிலிர்க்கும் குளிரானாலும்
ஆகாயம் மென்றாலும்
ஆழ்கடல் திண்றாலும்

துன்பமதை அறிவதில்லை
துயர் துடைக்க
தூயவன் தன்கரம்
நீட்ட தவறியதில்லை...

பிள்ளை பருவத்திலே
நினைத்து நினைத்து
நெஞ்சமதை நெருப்பாய்
எரிய வைப்பான்...

குமரப் பருவத்திலே
குமரிப் பெண்ணின்
இளமை குணத்திலே
தன்னிலை குலைவான்...

பின்பதை  நொந்து
தன்னிலை பார்த்தே
தாரமதை அமைப்பான்...

தேடிய நாள்முதல்
தேய்பிறையாய் தேடித்தேய்வான்
தேடிய அனைத்தும்
தீவாய்போக காண்பான்...

சொந்தம் பந்தம்
சொத்து சுகம்
மனைவி மக்கள்
சுற்றும் முற்றும்

அனைத்தும் அறிந்தபின்
ஆவி துடித்து
கட்டையிலே போகையில்
யாரேனும் கதறியழுதால்

பதறி எழுவான்
உள்ளதை தருவான்
உள்ளத்தாலே உருகுவான்...

உள்ளோர் உண்மையினை
அறிந்தால் உத்தமனின்
வாழ்க்கையை கண்டு
காணாத கானல்நீர்
போல் என்பர்...



              ✍️விசித்திரக்கவி 

Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்