புதிய நாடு


                              ✍விசித்திரக்கவி 
                                       06/01/2021

நம் கற்பனையின் கண்களுக்கு புலப்படாத தூரத் தேசத்து நகரமொன்றில் ஏற்பட்டப் பெரும் சத்தத்தின் அதிர்வில் ஐந்து வயது நிரம்பாதச்  சிறுவன் எழுந்து  தன் தாய் மற்றும் தகப்பனை தேடி திறந்தக் கதவின் வழியே வெளியே வீதிக்கு வருகிறான்...

அந்த விடி வெள்ளி தோன்றாத அதிகாலை பொழுதில்...

மூன்றாவது படி தடுக்கி கீழே விழுகையில் தான் தெரிகிறது அழகிய வீதியின் அலங்கோலம்...

நீண்டப் பசியில் இருந்தது போல வீதியின் இரு புறங்களிலும் பற்றி எரியும் நெருப்பு...

அழகாக உருவம் காட்டக் கூடிய கண்ணாடிகளின் உடைந்தச் சிதறல்கள்...

இடர்பாடுகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மக்கள்...

கண்ணீர் புகை குண்டுகள்
காதை துளைக்கும் தோட்டங்களின் சத்தங்கள் இமயம் உருகும் அளவுக்கு
அலறல் ஓலங்கள்...

தன் சக்திக்கு தாண்டி பீச்சி அடிக்கும் தண்ணீரின் வேகத்தில் கரையாதக் கண்ணீர் துளிகளின் ஈரம்...

இயங்கிய நிலையில் ஓடாத வாகனங்களின் எச்சரிப்பு ஒலி
காயம் பட்டவர்களின் இதயத்தினில் மரணத்தின் அலறல் ஒலி...

தோட்டாக்கள் ஆழம் பார்த்து சரிந்த உடல்கள் குவியல்களாய்...

குட்டிக்கரணம் போட்டச் சிறுவர்கள்
சிதைந்த உடல்களாய் உணர்வுகளற்ற நிலையில் பிண்டங்களாய், பிய்த்து எறியப்பட்ட ரோஜா இதழ்களாய் சிவந்த குருதியில் உறைந்து கிடக்கிறார்கள்...

அம்மா அடி வயிற்றை குறுகி பிடித்தபடி கரிய நிறத்துடன் கருகி போயிருக்கிறாள்...

தந்தை இதுவெனக் காணாதபடி சில உடல்கள்,சிதைந்தச் சில சடலங்களின் கலப்பில் கண்ணீர் வடியும் கண்ணில் பயம் கலந்த குரலில் அவன் அழைக்கும் அம்மா.... அப்பா.... என்ற வார்த்தையின் ஜீவன் ஜீவனற்று கிடக்கிறது...

மெல்ல மெல்ல குழந்தையின் அழுகை தேய்ந்தது, நடந்ததை அறிய ஆதவன் வீதி உலா வருவதற்காக...

இருண்ட வானத்தை விட்டு
வெட்கி வருகிறான் சிவந்த முகத்தோடு...  


                  பாகம் 2-ல்  தொடரும்...


Comments

Post a Comment

வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்