என்னருகே நீ வேண்டும்
இரவின் மடியில் பூவாய் நானுறங்க
தாலாட்டும் தேவதையாகி தித்திக்கும் தமிழோடுயெனை
மொத்தமாய் அணைத்து கொஞ்சமாய் கொஞ்ச
தேவன்மகளே என்னருகே நீ வேண்டும்...
சின்னச்சின்ன இம்சைகள் பல தந்து
ஆகிம்சையாய் இம்சை யெனை செய்து
குறும்பு பார்வையில் என்அரும்பு மீசையினை
சீண்டிட என்னருகே நீ வேண்டும்...
விழாக்கால விடியல் போல் தேவதை
நீயும் திருவிழா கோலத்தில் நித்தம்
எனை உன் வெட்கமழை சாரலில்
நனைத்திட என்னருகே நீ வேண்டும்...
✍விசித்திரக்கவி
Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...