தொலைதூரத்து சொந்தமவள்...
கோடைக்கால வெப்பத்தில்
குற்றாலச் சாரலாய்
குட்டி தேவதையவளை
குறும்புகாரியெனக் கண்டேன்...
கண்களால் பேசினேன்
யார் அவள்
என் தாயின்
அசல் நகலா...
இல்லை இல்லை
எனக்காய் பிறந்த
அன்னை உருவத்தின்
அதிசய மகளா...
அதிர்ச்சியிலே சிலநாள்
ஆனந்தத்தில் பலநாள்
வார்த்தைகள் இல்லை
வாய்ப்பேச வாய்ப்பில்லை...
கடந்தது காலம்
கனிந்தது பொழுது
கூடியது கூட்டம்
கொட்டியது மேளம்...
இணைந்தது உறவுகள்
இணைத்தது இருமனம்
அது தான்
அழகியத் திருமணம்...
அங்கே தான்
அந்த தூரதேசத்து
பெண்நிலவை கண்டேன்
தன்னிலை அறிந்தேன்...
இல்லாத உறவொன்றை
இமையோரம் கண்டேன்
இல்லத்தில் இல்லாத
தங்கையென கொண்டேன்...
தங்கையென வந்தாள்-பல
தாளங்கள் தந்தாள்
தலைமேல் குதித்தாள்
தவிகையிலே தாயாய் தாங்கினாள்...
காணாத விழிகளில்
கரையாத நினைவுகளாய்
கன்னத்தில் வழியும்
வலிநிறைந்த கண்ணீர்...
வழிகள் தேடி
இணைய வீதிகளிலே
இதயத்தின் துடிப்பை
இருவிழியில் கண்டேன்...
சண்டைகள் எங்களின்
பெரும் மகிழ்ச்சி
அமைதியே எங்களின்
மாபெரும் விரோதி...
விடிகின்ற பொழுதெல்லாம்
எங்களின் குறும்பின்
சிரிப்பில் பிடித்து
வைத்த ஆயுள்கைதிகள்...
நாங்கள் நாங்களாய்
நாட்கள் எல்லாம்
எங்களின் வசங்களாய்-அது
வீசுது வசந்தங்களாய்...
இதுவே போதும்
இந்த மூச்சு
இன்னும் இவளுக்காய்
இருநூறு ஆண்டுகள் வாழும்...
✍விசித்திரக்கவி
நன்றிகள்
ReplyDeleteநன்றிகள்
நன்றிகள்
நன்றிகள்....
❣️❣️❣️❣️❣️