முயற்சி

 முயற்சி 

வா...  வா...  

தோழா  வானம் 

தான்  இருக்கு... 


வாசற்  படிக்குள் 

என்னதான்  இருக்கு... 


இதய  கூட்டிலே 

ஈரம்  தான்  இருக்கு... 

நீ  ஏறி  மிதிக்க 

புது  வீரமிருக்கு... 


எட்டி  பிடிக்க 

விண்மீன்  இருக்கு... 

கட்டிப்  அணைக்க 

மின்னல்  இருக்கு... 


இடித்து  நொறுக்க 

இடி  இருக்கு... 

துள்ளி  விளையாட 

தூரல்  மழையிருக்கு... 


துரத்தி  அடிக்க 

புயல்  இருக்கு... 

துணிந்து  போக  -இனி 

பயம்  எதற்கு... 


இருட்டு  குள்ளே 

இரண்டு  காதிருக்கு... 

முள்  பார்க்க 

மூன்றாவது  கண்ணிருக்கு... 


கல்  எறிய 

கோள்  இருக்கு... 

இனி  கண்ணீர் 

தான்  எதற்கு... 


சாட்டை  எடுத்து 

விட்டதை  விரட்டு... 

அள்ளி  பருக 

அருவி  இருக்கு... 


நீ 

ஆட்டி  வைக்க 

ஆழ்  கடல்  ஏழிருக்கு... 


உன்  பார்வையிலே 

வெடிக்க  எரிமலை 

ஏராளமிருக்கு... 


ஆள்  காட்டி 

விரல்  காட்டி 

அடக்க  ஆயிரம் 

ஆட்கள்  இருக்கு... 


நீ  எழுந்து 

நடக்க  இமயம் 

நொருங்க  காத்திருக்கு...


தூக்கி  பிடிக்க 

புத்தகமிருக்கு... 

தூண்  போல 

தோள்  இருக்கு... 


கலைத்து  போட 

கண்டங்கள்  தானிருக்கு  

தயக்கம்  எதற்கு... 


சட்டங்களெல்லாம் 

திட்டங்களாக 

தவணையிலே  கிடக்கு...

 தரிசாய்  நீயெதற்கு... 


நீ  போடும் 

தாளத்திலே... 

தந்தி  போய் 

முந்தி  வரட்டும்... 


முடியாத  வெற்றி 

முயல்  குட்டி  போல் 

உனை  சுத்தி  வரட்டும்... 


வா...  வா...  

தோழா  வானம் 

தான்  இருக்கு...

      


                                                     காணொளி


                    என்றும்  தமிழோடு 

                          விசித்திரக்கவி

Comments

Post a Comment

வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்