சொட்டும் காதல்துளிகள்
நட்சத்திரங்கள் வெள்ளி பந்தை பார்த்து காதல் பார்வையினை பொழியும் நேரமது... ஆம், அது ஓர் அதிகாலை பொழுது, மார்கழி மாதத்தின் மாபெரும் குளிரின் நடுக்கமும் அதன் தாக்கமும் அவன் உடலை ஏதோ செய்து கொண்டிருந்தது... சட்டென்று முந்திக்கூவியின் முணுமுணுத்தலில் கண்விழித்தவன் செய்வது அறியாது, அந்த ஒளி குறைந்து ஒளிரும் பல்புகளையே வெறித்து பார்க்கையில் என் மனது என்னிடம் தவறு செய்து விட்டாய் மாறா என்று என்னை திட்டிகொண்டிருந்தது... இன்றைய தேதியிலிருந்து சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்... நிற்க இடம் இல்லாமல் மிகுந்த வேகத்துடன் 5c என்ற பேருந்து கண்ணகி நிறுத்தத்தில் நின்றது... அலையும் அலை கடல் போல் ஆறடி கூந்தலும் காற்றிலே கூத்தாடுது... பொட்டு வச்ச பூந்தளிர் மேனியோ புழுதி பறக்க புல்லாங்குழலிசை பாடிவருது... கால் முளைத்த கன்னி இவள் வெள்ளைநிற தாவணியில் பிள்ளை அவள்... தேவதை அவளின் அழகை வரிகளாக வர்ணித்து தான் மனத்துக்குள்ளே கவிதையினை அரங்கேற்றிக் கொண்டிருந்தான் மாறன்... அடித்து பிடித்து ஏறினாள...