கண் மூடும் வேளையா இதுகண்களையே மூடும் வேளையா...
கண் மூடும் வேளையா இது கண்களையே மூடும் வேளையா... கடவுளின் வேலையா இல்லை மனிதனின் பிழையா... தனி அறைக்குள் தணியாத தாகம் தனியே இருப்பதால் விடியும் மோகம்... முத்தி பெறும் சித்தி வரும் சக்தி தரும்-அதை சிவமே தரும்... சிக்கி தவிக்கும் விக்கியே விழுக்கும் நாக்குகளும் நடமாடும்-நாடே நாளும் பாடையில் போகும்... போதுமடா மனிதா போதுமடா பொறுமைகொள் தனியே திறன்கொள் தரணியே உனதடா... தரித்திரம் போகட்டும் சரித்திரம் மாறட்டும் விசித்திரம் விலகட்டும் நலம் நச்சத்திரமாய் மின்னட்டும்... காற்றிலே காத்திரு காற்றை காத்திரு காலம் மாறும் கடமைகள் தொடரும்... என்றும் தமிழோடு -விசித்திரக்கவி