ஓர் நாள் ஊரடங்கு
ஓர்நாள் ஊரடங்கென்றால் எங்கள் வயிறடங்கிடுமா...? ரோட்டோரா வாழ்க்கையில் ரொட்டித் துண்டாவது கிடைத்திடுமா...? மூன்று வேளையில் ஓர் வேளையாவது இன்று உண்டிடுவோமா-இல்லை பசியிலே உறங்கிடுவோமா...? உழைத்தே உண்கிறோம் உணர்வுகளை துறந்து, சிலநேரம் பசியின் உச்சத்தில் கைகளை ஏந்துகின்றோம்... உரிமைகள் வேண்டாம் உணவாவது வேண்டும் கிடைத்திடுமா...! நாங்களும் பசி மறப்போமா... ✍️விசித்திரக்கவி