எழுந்து வாடா என் தோழா...
உரிமைகளை விற்று
ஊமையாகிக் கொண்டிருக்கிறாய்
உணர்வுகளைத் தொலைத்து
ஊணமாகித் தவிக்கிறாய்...
உழைப்பை மறந்து
ஊதாரியாய் திறிகிறாய்
உரக்கப் பேசினாலே-உன்
நரம்பேயுனைக் கொன்றுவிடும்
தொடுதிரையில் தொட்டபடியே
தூங்கிக் கிடக்கிறாய்
தூசுகள் படிந்து
துரும்பாய் உதிர்கிறாய்...
உதிரத்தின் வேகத்தில்
அதிரும் இளமையடா
ஆகாய வீதியில்-இங்கு
ஆழ்கடலே பாயுமடா...
எழுந்து வாடா
என் தோழா
ஏணிகள் தேவையில்லை
துணிவுகள் போதும்...
-விசித்திரக்கவி...
முயற்சி உனை திருவினையாலனாக்கும் நண்பா
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDelete