ஓர் நாள் ஊரடங்கு

ஓர்நாள் ஊரடங்கென்றால்
எங்கள் வயிறடங்கிடுமா...?
ரோட்டோரா வாழ்க்கையில்
ரொட்டித் துண்டாவது கிடைத்திடுமா...?

மூன்று வேளையில்
ஓர் வேளையாவது
இன்று உண்டிடுவோமா-இல்லை
பசியிலே உறங்கிடுவோமா...?

உழைத்தே உண்கிறோம்
உணர்வுகளை துறந்து,
சிலநேரம் பசியின் உச்சத்தில்
கைகளை ஏந்துகின்றோம்...

உரிமைகள் வேண்டாம்
உணவாவது வேண்டும்
கிடைத்திடுமா...!
நாங்களும் பசி மறப்போமா...

            ✍️விசித்திரக்கவி 







Comments

Post a Comment

வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்