கடைசி கண்ணீர் துளி...

(சிலருக்கு மட்டுமே பொருந்தும் )

தேடித் தேடி
தீர்ந்து போகுதே
என் கண்ணீர்
தீர்ந்து போகுதே...

இமைகளை விட்டு
நீ எங்கே
வெறுத்து போனாயோ - அதை 
விற்றுப் போனாயோ...

இமயம் தெரிந்ததென
இளமை தீருமென
இடையே விட்டு
இளையவளே போனதென்ன

புதுசுகம் வந்ததென
பூமணம் அழைத்ததென
என் புன்னகையோடு
உன் பெண்நகையும் 
அழிக்கப் போனாயோ...

விளக்கு ஏத்தியவளோ
விலகி போகலாமா
விலக்கி போகலாமா
ஆசைக்குதான் போகலாமா...

பால்மணம் கண்டவள்
பால்மனம் காணலையோ
பால் நிலவே -நீ 
பாழாய் போகலாமோ 

உண்ண குறையா
உடுத்த குறையா
உறவிலே குறையா
உணர்விலே குறையா

என்னடி வைத்தேன் -நான் 
என்னடி வைத்தேன்
நீ வைத்ததை யெல்லாம்
வாடாமலாடி வந்தேன் 

சொல்லடி சொல்லடி
சீமையிலே இல்லாத
கருப்பட்டி கண்ணழகி
காஞ்சிப் பட்டழகி...

                   ✍️விசித்திரக்கவி




Comments

Popular posts from this blog

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்