மாமன் மகள்




மதுரை மல்லியாய் 

மணக்கும் சந்தனமாய் 

மான்விழி பார்வையில்-எனை  

மத்தாப்பாய் சுத்திடுவாள்  


மந்தரை பெண்ணழகியோ  

மயக்கும் கண்ணழகி 

மாலை நேரத்தில் -என் 

மாங்குயில் ராகமவள் 


மாதுளை கன்னத்தில் 

மாங்கனி சுவையாள்

மச்சானை மயக்கி 

மடியிலே சிறைபிடிப்பாள்...


மார்கழி மாதத்து

மாந்தளிராய் மின்னிடுவாள் 

மஞ்சனையிலே நெஞ்சோடு 

மாமனை அணைத்திடுவாள் 


மயக்கத்தில் என் 

மடி சாய்வாள் 

மச்சத்தை காட்டி-என்  

மனதை கட்டிடுவாள் 



மாமான் மகளோ -என் 

மாமான் மகளோ 

மணி மணியாய்-பூ  

மாலையாய் பூத்து 

மாலையிலே காத்திருப்பாள்... 








 


Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்